பொது செய்தி

தமிழ்நாடு

வீடுகளுக்கு நடுவே காடு

Added : டிச 28, 2020
Share
Advertisement
சாக்கடை கால்வாயை துார் வாரணும்தடாகம் ரோடு, இடையர்பாளையம், பாரதியார் வீதி 2ல், சாக்கடை கால்வாயில், மண் நிரம்பி அடைப்பு ஏற்பட்டுள்ளது. கழிவு நீர் சீராக செல்லும் வகையில், இக்கால்வாயை துார் வேண்டும்.- விஜயகுமார், இடையர்பாளையம்.வாகன ஓட்டிகள் அவதிசரவணம்பட்டி சந்திப்பில், கேபிள் பதிக்க தோண்டப்பட்ட குழியால், ரோடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இரு சக்கர வாகன ஓட்டிகள்

சாக்கடை கால்வாயை துார் வாரணும்தடாகம் ரோடு, இடையர்பாளையம், பாரதியார் வீதி 2ல், சாக்கடை கால்வாயில், மண் நிரம்பி அடைப்பு ஏற்பட்டுள்ளது. கழிவு நீர் சீராக செல்லும் வகையில், இக்கால்வாயை துார் வேண்டும்.- விஜயகுமார், இடையர்பாளையம்.

வாகன ஓட்டிகள் அவதிசரவணம்பட்டி சந்திப்பில், கேபிள் பதிக்க தோண்டப்பட்ட குழியால், ரோடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இரு சக்கர வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர்; தவறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.- ரமேஷ், சரவணம்பட்டி.

குப்பை கிடங்கால் அவதிவடவள்ளி, கே.கே.ஆர்., நகரில், குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள, காலி இடம் குப்பை கொட்டும் இடமாக மாறியுள்ளது. இதில் குவிக்கப்படும் குப்பை, துாய்மை பணியாளர்களால், முறையாக அப்புறப்படுத்தப்படுவதில்லை.- வைதேகி, கே.கே.ஆர்.நகர்.

சாக்கடை கால்வாய் அடைப்புமாநகராட்சி, 66வது வார்டுக்கு உட்பட்ட, உடையாம்பாளையம், அசோக் வீதி வடக்கு பகுதியில், சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவுநீர் தேங்கி, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- விஜய்ஆனந்த், அசோக் வீதி.

கே.கே.நகரில் கும்மிருட்டுமாநகராட்சி, 41வது வார்டுக்கு உட்பட்ட, கணபதி, கே.கே.நகர், நான்காவது வீதியில் உள்ள, மின் கம்பத்தில், கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக, விளக்கு எரிவதில்லை. இப்பகுதி இருளில் மூழ்கியுள்ளது.- அன்பரசு, கே.கே.நகர்.

விளக்கு எரிவதில்லைசத்தி ரோடு, சரவணம்பட்டி, கீரணத்தம் பிரதான சாலையில் உள்ள, மின் கம்பத்தில் கடந்த சில மாதங்களாக, விளக்கு எரிவதில்லை.- வெங்கடேஷ், கீரணத்தம்.

குடியிருப்புகளுக்கு மத்தியில் காடுமாநகராட்சி, 17வது வார்டுக்கு உட்பட்ட, வடவள்ளி குருசாமி நகர், எஸ்.பி.கே.நகர் மற்றும் பாலாஜி நகரின் மத்தியில் உள்ள, காலி இடத்தில், கருவேல மரங்கள் வளர்ந்து, காடுபோல் காட்சியளிக்கிறது. இதில் இருந்து வெளியேறும் விஷப்பூச்சிகளால், மக்கள் அச்சத்தில் உள்ளனர்.- ராமலிங்கம்,

பாலாஜி நகர்.

சாக்கடை கால்வாய் சிலாப்பை மாற்றணும்மாநகராட்சி, 40வது வார்டுக்கு உட்பட்ட, ஆவாரம்பாளையம், காமராஜ் நகர், ஐந்தாவது வீதியில், சாக்கடை கால்வாய் சிலாப் சிதிலமடைந்துள்ளது.-சஞ்சய், காமராஜ் நகர்.

விபத்து அபாயம்வேடபட்டி, எப்.சி.ஐ., காலனியில், திறந்த நிலையில் உள்ள சாக்கடை கால்வாயால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. இக்கால்வாய்க்கு சிலாப் அமைக்க வேண்டும்.- உமாமகேஸ்வரி, வேடபட்டி.

கழிவுநீர் தேக்கம் சுகாதார சீர்கேடுசின்னவேடம்பட்டி, சுப்பநாயக்கன்புதுார், நட்சத்திரா கார்டனில், சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவுநீர் தேங்கி, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.-புருேஷாத்தமன்தாஸ், நட்சத்திரா கார்டன்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X