கோவை:இரும்பு, சிமென்ட் உள்ளிட்டவற்றின் விலை அபரிதமாக உயர்ந்து வருவதால், வீடு கட்டும் மக்கள் பாதிக்கப்படுவதுடன், வீட்டின் விலையையும் உயர்த்த வேண்டியுள்ளதாக, 'கிரெடாய்' தெரிவித்துள்ளது.சென்னைக்கு அடுத்து, கட்டுமான துறையில் அதீத வளர்ச்சிபெற்ற நகரமாக கோவை விளங்குகிறது. இங்கு, நகரங்களில் மட்டுமின்றி, புறநகரங்களிலும் லே - அவுட்கள், தனி வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகரித்து வருகின்றன.
உள்ளூர் நிறுவனங்கள் மட்டுமின்றி, வெளியூர் நிறுவனங்களும் கட்டுமான பணியில் பல ஆண்டுகளாக இங்கு ஈடுபட்டு வருகின்றன. இத்தொழிலில் நேரடியாக மூன்று லட்சம் பேரும், மறைமுகமாக, 1.5 லட்சம் பேரும் பணிபுரிந்து வருகின்றனர்.கட்டுமானத்துக்கு தேவையான இரும்பு, சிமென்ட் விலை, 40 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.இதனால் ஏற்கனவே ஒப்பந்தம் செய்திருக்கும் பணி பாதிக்கப்படுவதுடன், மக்களின் சொந்த வீடு கனவும் கேள்விக்குறியாகிறது. மத்திய அரசு உடனே தலையிட்டு விலையேற்றத்தை கட்டுப்படுத்த, 'கிரெடாய்' உள்ளிட்ட அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர் சங்கங்களின் கூட்டமைப்பான, 'கிரெடாய்' கோவை தலைவர் சுரேந்தர் விட்டல் கூறியதாவது:இவ்வாண்டு துவக்கத்தில் ஒரு டன், 40 ஆயிரமாக இருந்த இரும்பு, தற்போது, 58 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. சிமென்ட், இரும்பு விலை, 40 சதவீதம் என அபரிமிதமாக உயர்ந்து பெரும் பின்னடைவு தருகிறது. இரும்பின் தேவை அதிகரித்து வருவதை சாதகமாக்கிக்கொண்டு, அதன் உற்பத்தியாளர்கள் விலையை உயர்த்தி வருகின்றனர்.பிற கட்டுமானப் பொருட்களின் விலை, வேகமாக உயர்ந்து வருவதால், வீட்டின் விலையை உயர்த்த வேண்டியுள்ளது.
இது, வீடு கட்டும் பாமர மக்களையும் பாதிக்கிறது.இந்நிலை நீடித்தால், கட்டுமானத்துறையை நம்பியிருக்கும், 4 கோடி தொழிலாளர்கள் வேலை இழக்கும் வாய்ப்புள்ளது. மத்திய அரசு இதற்கு உடனடி தீர்வு காண வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.இவ்வாண்டு துவக்கத்தில் ஒரு டன், 40 ஆயிரமாக இருந்த இரும்பு, தற்போது, 58 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. சிமென்ட், இரும்பு விலை, 40 சதவீதம் என அபரிமிதமாக உயர்ந்து பெரும் பின்னடைவு தருகிறது. இரும்பின் தேவை அதிகரித்து வருவதை சாதகமாக்கிக்கொண்டு, அதன் உற்பத்தியாளர்கள் விலையை உயர்த்தி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE