கோவை:சென்னை சென்ட்ரல் - கோவை இன்டர்சிட்டி உள்ளிட்ட சிறப்பு ரயில்களின் இயக்க நேரம், இன்று முதல் மாற்றப்பட்டுள்ளது.சென்னையில் இருந்து கோவை வரும் இன்டர்சிட்டி ரயில்(02679), சேலம் ஸ்டேஷனில் இரவு, 7:20 மணிக்கு பதிலாக, 7:15க்கும், ஈரோட்டில் இருந்து, இரவு, 8:25க்கு மாறாக, 8:20க்கும், வடகோவையில் இருந்து இரவு, 9:45க்கு மாறாக, 9:40க்கும் புறப்படுகிறது; 5 நிமிடங்களுக்கு முன்னதாகவே இந்த ஸ்டேஷன்களுக்கு வந்தடைகிறது.நாகர்கோவில் - மும்பை சி.எஸ்.எம்.டி., சிறப்பு ரயில்(06340) திருப்பத்துாரில் இருந்து மாலை, 5:20க்கு மாறாக, 5:35க்கு புறப்படுகிறது. மைசூர் - துாத்துக்குடி சிறப்பு ரயில்(06236) சேலத்தில் இருந்து மதியம், 2:00க்கும், ஈரோட்டில் இருந்து மதியம், 3:35க்கும் என ஐந்து நிமிடங்களுக்கு முன்னரே இன்று முதல் புறப்படும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE