கோவை:ஆதிதிராவிடர், பழங்குடியினர் மேம்பாட்டிற்காக ஆதிதிராவிடர் நலம் மற்றும் கண்காணிப்பு குழு, புதிய உறுப்பினர்களுடன் அமைக்கப்பட்டுள்ளது.ஆதிதிராவிடர், பழங்குடியினர் மேம்பாட்டிற்காக பல்வேறு பிரிவுகளின், 13 வகையான குழுக்கள் செயல்படுகின்றன. இதன் மூலம், குடியிருப்பு பகுதிகளில் வசதிகள் ஏற்படுத்துதல், அரசு திட்டங்கள் செயல்படுத்துதல், கல்வி உதவித்தொகை, பொருளாதார மேம்பாடு, தொழில் மேம்பாடு என பல்வேறு செயல்பாடுகள் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்வதும், கண்காணிப்பதும் இது போன்ற குழுக்களின் கடமை.மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம் கடந்த, 2015ல் அமைக்கப்பட்டது. 2018ல் அதன் பதவிக்காலம் முடிவடைந்தது. தொடர்ந்து, தற்போது வரை புதிய குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படாமல் இருந்தது.தற்போது புதிதாக அமைக்கப்பட்டுள்ள குழுவில் தலைவராக, கலெக்டர் ராஜாமணி, செயல் இயக்குனராக ஆதிதிராவிடர் பழங்குடியின திட்ட இயக்குனர் பிரபாகரன் உட்பட, இக்குழுவில், 15 உறுப்பினர்கள் உள்ளனர்.இக்குழுவில், பாரதியார் பல்கலை பேராசிரியர் சுரேஷ்பாபு, சி.பி.எம்., கலை கல்லுாரி பேராசிரியர் சிங்காரவேலு, சுகுணா கல்லுாரி பேராசிரியர் அன்புசிவா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE