பொது செய்தி

தமிழ்நாடு

'மருந்துக்கு கூட' மருந்தாளுனர் இல்லை!

Added : டிச 28, 2020
Share
Advertisement
கோவை:மினி கிளினிக்குகளில் மருந்தாளுனர் பணியிடம் ஏற்படுத்த வேண்டும் என, தமிழக அரசு மருந்தாளுனர்கள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.தமிழகத்தில் 2,000 மினி கிளினிக்குகள் துவங்க திட்டமிட்டு முதல்கட்டமாக, 630 இடங்களில் துவங்கப்பட்டுள்ளன. இங்கு தலா ஒரு டாக்டர், நர்ஸ், மருத்துவ உதவியாளர் இருப்பர். இவர்களுடன், மருந்தாளுனர் பணியிடமும் ஏற்படுத்த வேண்டும் என்று, அரசு

கோவை:மினி கிளினிக்குகளில் மருந்தாளுனர் பணியிடம் ஏற்படுத்த வேண்டும் என, தமிழக அரசு மருந்தாளுனர்கள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.தமிழகத்தில் 2,000 மினி கிளினிக்குகள் துவங்க திட்டமிட்டு முதல்கட்டமாக, 630 இடங்களில் துவங்கப்பட்டுள்ளன. இங்கு தலா ஒரு டாக்டர், நர்ஸ், மருத்துவ உதவியாளர் இருப்பர். இவர்களுடன், மருந்தாளுனர் பணியிடமும் ஏற்படுத்த வேண்டும் என்று, அரசு மருந்தாளுனர்கள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழ்நாடு அரசு மருந்தாளுனர்கள் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் ராஜாராம் கூறியதாவது:தமிழகத்தில் அனைத்து தரப்பு மருத்துவமனைகளிலும், 4,500 மருந்தாளுனர் பணியிடங்கள் உள்ளன. இவற்றில், 1,280 பணியிடங்கள் காலியாக உள்ளன. தற்போது தொடங்கப்பட்டுள்ள மினி கிளினிக்குகளில், மருந்தாளுனர் பணியிடம் ஏற்படுத்தவில்லை.மருந்தாளுனர்கள் இல்லாமல், நோயாளிகளுக்கு மருந்துகள் எப்படி வழங்க முடியும். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து, மினி கிளினிக்குகளுக்கு மாத்திரை உள்பட அனைத்து மருந்துகளும் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுனர்களே, இதற்கான கணக்கை பராமரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்களில், ஒரேயொரு மருந்தாளுனர் மட்டுமே பணியில் இருப்பதால், பணிச்சுமை அதிகமாக உள்ளது.இந்நிலையில் மினி கிளினிக்குகளுக்கு மருந்துகள் வழங்குவது, கண்காணிப்பது பணிச்சுமையை அதிகரிக்கும். எனவே, மருந்தாளுனர் பணியிடம் ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X