கள்ளக்குறிச்சி : ''தமிழகத்தில் இனி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் ஆட்சி தான் அமையும். அமைச்சரவையிலும் பா.ஜ. இடம்பெறும் '' என அக்கட்சியின் மாநில தலைவர் முருகன் பேசினார்.
கள்ளக்குறிச்சியில் நேற்று நடந்த பா.ஜ. கட்சியின் அணிகள் மற்றும் பிரிவுகளின் மாவட்டபிரதிநிதிகள் மாநாட்டில் அவர் பேசியதாவது: விவசாயிகளின் வளர்ச்சியே தேசத்தின் வளர்ச்சி. மக்களுக்கு உணவு கொடுக்கும் விவசாயிகளின் வாழ்க்கை மேம்பட வேண்டும். அதற்காக பிரதமர் மோடி சட்ட திருத்தத்தை ஏற்படுத்தியுள்ளார்.

அதை புரிந்துகொள்ளாமல் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி தவறான பிரசாரம் செய்து வருகின்றனர். விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் விளையாடும் அக்கட்சியினரை வரும் தேர்தலில் மக்கள் ஓட ஓட விரட்ட வேண்டும்.
சட்டசபை தேர்தலில் பா.ஜ. உறுப்பினர்கள் அதிகளவில் வெற்றி பெற்று சட்டசபையிலும் அமைச்சரவையிலும் அங்கம் வகிப்பர். தமிழகத்தில் இனி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் ஆட்சி தான் அமையும். அதற்காக நாங்கள் அயராது உழைப்போம். இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE