கிணத்துக்கடவு:'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியாக, கிணத்துக்கடவு ஒன்றியத்திற்குட்பட்ட ஒன்பது ஊராட்சிகளுக்கு பேட்டரி வாகனங்கள் வழங்கப்பட்டன.கிணத்துக்கடவு ஒன்றியத்திற்குட்பட்ட, 34 ஊராட்சிகளில், குப்பை அள்ள வசதியாக பேட்டரி வாகனங்கள் வழங்கப்பட்டு வந்தது. இந்த வாகனங்கள் பழுதடைந்ததால், மீண்டும் புதிய பேட்டரி வாகனங்கள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.சொலவம்பாளையம், வடபுதுார், கொண்டம்பட்டி, முத்துார், சொக்கனுார், நல்லட்டிபாளையம், கோவில்பாளையம், கப்பளாங்கரை, வடசித்துார் போன்ற ஊராட்சிகளுக்கு பேட்டரி வாகனம் வழங்குவதற்காக, 13 வாகனங்கள் வாங்கப்பட்டன.இந்த வாகனங்கள் கடந்த மூன்று மாதங்களாக, ஒன்றிய அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், ஊராட்சிகளில் குப்பைைய அள்ளுவதில் சிரமம் ஏற்பட்டு வந்தது.இதுகுறித்து, 'தினமலர்' நாளிதழிலில் செய்தி வெளியிடப்பட்டது. செய்தி எதிரொலியாக, ஒன்றிய அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேட்டரி வாகனங்கள் ஊராட்சிகள் வசம் ஒப்படைக்கப்பட்டன.இதற்கான விழாவுக்கு, ஒன்றியக்குழு தலைவர் நாகராணி தலைமை வகித்தார். துணைத்தலைவர் துரைசாமி வரவேற்றார். துணை சபாநாயகர் ஜெயராமன், கிணத்துக்கடவு எம்.எல்.ஏ., சண்முகம் ஆகியோர், பேட்டரி வாகனங்களை வழங்கினர்.வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சிகள் சாய்ராஜ், ஒன்றிய அலுவலர்கள், ஊராட்சி தலைவர்கள், செயலர்கள் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE