பொது செய்தி

தமிழ்நாடு

ரயில்வே பாலம் அருகே மின்விளக்கு அவசியம்

Added : டிச 28, 2020
Share
Advertisement
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில், மேம்பாலம் அருகே மின் விளக்கு அமைக்காததால், இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து மக்கள் அவதிப்படுகின்றனர்.கிணத்துக்கடவு - காட்டம்பட்டி ரோட்டின் குறுக்கே, ரயில்வே ஸ்டேஷன் அருகே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. ரயில்வே ஸ்டேஷனுக்கு மேற்கு பகுதியில், மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.ஆனால், கிழபகுதியில் மின் விளக்கு

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில், மேம்பாலம் அருகே மின் விளக்கு அமைக்காததால், இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து மக்கள் அவதிப்படுகின்றனர்.கிணத்துக்கடவு - காட்டம்பட்டி ரோட்டின் குறுக்கே, ரயில்வே ஸ்டேஷன் அருகே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. ரயில்வே ஸ்டேஷனுக்கு மேற்கு பகுதியில், மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.ஆனால், கிழபகுதியில் மின் விளக்கு அமைக்கவில்லை. மேலும், ரயில்வே பாலத்தை கடக்கும் இடத்திலும் மின் விளக்கு இல்லை. இதனால், இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.இதனால், பைக்கில் வருபவர்களை வழிமறித்து பணம் பறிக்கும் சம்பவங்கள் அரங்கேறுகின்றன. மேலும், நடந்து செல்பவர்களும், பாலம் அருகே அச்சத்துடன் கடந்து செல்கின்றனர்.இதனை தடுக்க, மின் விளக்கு அமைத்தால், பாலத்தின் வழியாக அச்சமின்றி செல்ல முடியும். இதற்கு, ரயில்வேத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X