பொது செய்தி

தமிழ்நாடு

பாசன கால்வாயில் பிரச்னைகள் ஏராளம்! புதிய ஆயக்கட்டு விவசாயிகள் புகார்

Added : டிச 28, 2020
Share
Advertisement
ஆனைமலை:ஆழியாறு புதிய ஆயக்கட்டு விவசாயிகள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, முதல்வர், பொதுப்பணித்துறைக்கு மனு அனுப்பியுள்ளனர்.ஆழியாறு அணையில் இருந்து, புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு, பொள்ளாச்சி கால்வாய், வேட்டைக்காரன்புதுார் கால்வாய், சேத்துமடை மற்றும் ஆழியாறு ஊட்டுக் கால்வாயில், 44 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.இந்நிலையில், பல்வேறு பிரதான,

ஆனைமலை:ஆழியாறு புதிய ஆயக்கட்டு விவசாயிகள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, முதல்வர், பொதுப்பணித்துறைக்கு மனு அனுப்பியுள்ளனர்.ஆழியாறு அணையில் இருந்து, புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு, பொள்ளாச்சி கால்வாய், வேட்டைக்காரன்புதுார் கால்வாய், சேத்துமடை மற்றும் ஆழியாறு ஊட்டுக் கால்வாயில், 44 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.இந்நிலையில், பல்வேறு பிரதான, கிளைக்கால்வாய்களில் கழிவுநீர் கலப்பது, வழித்தட ஆக்கிரமிப்பு என பல பிரச்னைகளால், விவசாயிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் நலச்சங்கத்தினர் கூறியதாவது: பல ஆண்டுகளாக, அங்கலக்குறிச்சி மின்வாரிய அலுவலகம் அருகிலும், கிராமத்தின் மையப்பகுதி, வனத்துறை குடியிருப்பு என, மூன்று பகுதிகளில், கழிவுநீர் பாசன கால்வாயில் கலந்து நீர் மாசடைகிறது. குப்பைகளால் அடைப்பு ஏற்படுகிறது.ஒடையகுளம், கரியாஞ்செட்டிபாளையம் பகுதிகளில், கழிவுநீர் பாசன கால்வாயில் கலக்கிறது. விவசாயிகள் கோரிக்கை வைத்தும், பல ஆண்டுகளாக இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படாமல் உள்ளது.இந்தாண்டு, குடிமராமத்து திட்டத்துக்கு அரசு போதிய அளவு நிதி ஒதுக்கியதால், கால்வாய்கள் சுத்தம் செய்யப்பட்டு கடைமடை பகுதிக்கு குடிநீர் எடுத்துச் செல்ல முடிந்தது. அடுத்தாண்டு, கூடுதல் நிதி ஒதுக்கினால், மராமத்து பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த முடியும். அதேபோல், கால்வாய்களின் அருகிலுள்ள அரசின் வண்டித்தடங்களில், ஆக்கிரமிப்புகள் உள்ளதால், குடிமராமத்து செய்வதற்கு பொருட்கள் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. கழிவுநீர் கலப்பதை தடுத்து, வண்டித்தட ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி முதல்வருக்கும், பொதுப்பணித்துறைக்கும் கோரிக்கை மனு அனுப்பப்பட்டு உள்ளது.இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X