மடத்துக்குளம்:மடத்துக்குளம் பகுதியில் சொட்டு நீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு மானியம் வழங்கப் படுவ தாக தோட்டக்கலைத் துறையினர் தெரிவித்துள்ளனர்.மடத்துக்குளம் தாலுகா அமராவதி புதிய ஆயக்கட்டு, பாசன பகுதியில் காய்கறி அதிகளவு சாகுபடி செய்யப்படுகின்றன. இச்சாகுபடியில், சொட்டு நீர் பாசனம் அமைத்து, தண்ணீர் சிக்கனம் உட்பட பல்வேறு நன்மைகளை பெற, தோட்டக்கலைத்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் திவ்யா கூறியதாவது:தாந்தோணி, துங்காவி, மெட்ராத்தி, ஜோத்தம்பட்டி, வேடப்பட்டி, மைவாடி ,சங்கராமநல்லூர், குமரலிங்கம் மற்றும் பாப்பான்குளம் ஆகிய பகுதிகளில் தர்பூசணி சா குபடி செய்யப்பட்டுள்ளது. நடவு செய்து 70 நாட்களில் அறுவடை செய்யும் பயிராக இது உள்ளது.குறைந்த சாகுபடி செலவு, எளிமையான பராமரிப்பில் விவசாயிகளுக்கு, லாபம் வழங்கும் இந்த பயிருக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. இதோடு, 'மல்சிங்' எனும் நிலப் போர்வை முறைக்கும் மானியம் வழங்கப்படுகிறது. 2020- 21 ஆம் ஆண்டிற்கு, 17.5 ஏக்கருக்கு, மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தற்போது பதிவு செய்யும் விவசாயிகளுக்கு, எதிர்வரும் நிதியாண்டில் நிலப்போர்வை மானியம் பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த மானியங்கள் பெற, 'உழவன்' செயலி வாயிலாகவோ அல்லது தோட்டக்கலை துறையினரை நேரடியாக அணுகியும் பயன்பெறலாம். கூடுதல் விபரங்களுக்கு தோட்டக்கலை உதவி அலுவலர்கள் தாமோதரன் (9659838787) பிரபாகரன் (7538877132) ஆகியோரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE