பொள்ளாச்சி:பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், சனிப்பெயர்ச்சியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.பொள்ளாச்சி ஜோதிநகர் சுவாமி விவேகானந்தர் கலை மற்றும் நற்பணி மன்றம், ஜோதிநகர் பொதுமக்கள் சார்பில், சனிப்பெயர்ச்சி யாக பெருவிழா, அருள்ஜோதி திருமண மண்டபத்தில் நடந்தது.நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு மங்கள இசையுடன் விழா துவங்கியது. 4:30 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாகம், பஞ்சகவ்யம், மகா கணபதி ேஹாமம், நவக்கிரக கடங்கள் ஸ்தாபிதம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.காலை, 8:00 மணிக்கு வேதிகார்ச்சனை, காலை, 8:30 மணி முதல் 11:00 மணிக்குள், நவக்கிரக ேஹாமம், சனீஸ்வர பகவான் காயத்ரி ேஹாமம், திரவியாஹுதி, பூர்ணாஹுதி பூஜைகள்; தீபாராதனை, வேத பாராயணங்கள், திவ்ய திருமுறைகள் ஓதுதல், ேஹாம உபசாரங்கள், ராகதள உபசாரங்கள், மகா தீபாராதனை பூஜைகள் நடந்தது. மதியம், 12:00 மணிக்கு மகேஸ்வர பூஜை, சிறப்பு அன்னதானமும் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் சமூக இடைவெளி பின்பற்றி வழிபாடு செய்தனர்.பொள்ளாச்சி மாகாளியம்மன் கோவிலில், காலை, 6:00 மணிக்கு கணபதி ேஹாமம், நவக்கிர சாந்தி ேஹாமம், அபிேஷகம், சனி சகஸ்ரநாம அர்ச்சனை, அலங்காரம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.காலை 8:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. சனீஸ்வர பகவான் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பரிகார ராசிக்காரர்கள் அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர்.கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், ேஹாமம், அபிேஷகம், அலங்காரம், ஆராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், சனிப்பெயர்ச்சி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.வால்பாறைவால்பாறை, சுப்ரமணிய சுவாமி கோவிலில், நேற்று காலை, 9:00 மணிக்கு சனிப்பெயர்ச்சி யாக பூஜை நடந்தது. யாக வேள்வியில், கலசத்துக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.அதன்பின், கலசங்களை பக்தர்கள் கையில் ஏந்தி கோவிலை வலம் வந்தனர். நவக்கிரகங்களுக்கு அபிேஷகம், சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து சுவாமியை தரிசித்தனர். வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் உள்ள கோவில்களில் சனிப்பெயர்ச்சி சிறப்பு யாக பூஜை நடந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE