பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி சீரமைப்புக்கு ஆலோசனை

Added : டிச 28, 2020
Share
Advertisement
உடுமலை:உடுக்கம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், பள்ளி சீரமைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான ஆலோசனைக்கூட்டம் நடந்தது.கூட்டத்தில், முன்னாள் ஊராட்சி தலைவர் பரமசிவம் தலைமை வகித்தார். ஊராட்சி துணைத்தலைவர் ஆறுமுகம் மற்றும் தலைமையாசிரியர் மரியபுஷ்பம் முன்னிலை வகித்தனர். பள்ளியில், விரைவில், சீரமைப்பு பணிக்கான முறைகளை திட்டமிடுவது; சீரமைப்பு பணிகளுக்கு

உடுமலை:உடுக்கம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், பள்ளி சீரமைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான ஆலோசனைக்கூட்டம் நடந்தது.கூட்டத்தில், முன்னாள் ஊராட்சி தலைவர் பரமசிவம் தலைமை வகித்தார். ஊராட்சி துணைத்தலைவர் ஆறுமுகம் மற்றும் தலைமையாசிரியர் மரியபுஷ்பம் முன்னிலை வகித்தனர். பள்ளியில், விரைவில், சீரமைப்பு பணிக்கான முறைகளை திட்டமிடுவது; சீரமைப்பு பணிகளுக்கு உள்ளூரில் உள்ள பணியாளர்களின் ஆலோசனைகளை பெற தீர்மானிக்கப்பட்டது.மேலும், மேற்கூரையை சீரமைத்து, பழுதடைந்துள்ள ஜன்னல் மற்றும் கதவுகளை மாற்றுவது, வகுப்புகளை பிரிக்க சுவர் அமைப்பது, மாணவர்களின் பாதுகாப்பிற்கான, மேற்கூரையை கான்கிரீட்டில் மாற்ற மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசிடம் கோரிக்கை வைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் சுய உதவிக் குழுவினர், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் மற்றும் மாணவர்களின் பெற்றோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X