பொள்ளாச்சி:வேளாண், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதிக்கான அமைப்பின் பயிலரங்கத்தை, பொள்ளாச்சியில் ஜன., மாதம் நடத்த, எம்.பி., வலியுறுத்தியுள்ளார்.மத்திய தொழில் வர்த்தக அமைச்சகத்தின் கீழ் இயங்கும், வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதிக்கான அமைப்பு (ஏ.பி.இ.டி.ஏ.,), கடந்த மார்ச் மாதம் பொள்ளாச்சியில் தொழில்நுட்ப பயிலரங்கை அறிவித்தது.ஆனால், ஊரடங்கு அமலானதால், பயிலரங்கம் தள்ளிப்போனது. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, இயல்பு நிலை திரும்பியுள்ளதால், அறிவிக்கப்பட்ட பயிலரங்கத்தை, வரும் ஜன., மாதம் நடத்த வேண்டும், என, டில்லியில் உள்ள ஏ.பி.இ.டி.ஏ., அமைப்பின் தலைவர் அங்கமுத்துவுக்கு, பொள்ளாச்சி எம்.பி., சண்முகசுந்தரம் கடிதம் எழுதி வலியுறுத்தியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE