பொள்ளாச்சி:பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்துக்குட்பட்ட பொதுமக்களுக்கு வழங்க, நோய் எதிர்ப்பு மருந்துகள் அடங்கிய 'கிட்' தயார் செய்யப்பட்டுள்ளது.கொரோனா தொற்றில் இருந்து பொதுமக்கள் எதிர்ப்பு திறனை பெற, அரசு இலவச நோய் எதிர்ப்பு மருந்துகள் அடங்கிய 'கிட்'டை பொதுமக்களுக்கு வழங்கும் திட்டத்தை செயல்படுத்துகிறது.இதில் ஒவ்வொரு 'கிட்'டிலும், கபசுரக்குடிநீர் சூரணம் - 50 கிராம்; மல்டி வைட்டமின் மாத்திரைகள் - 40; துத்தநாக சத்து மாத்திரைகள் - 40; ஓமியோபதி மருந்தான ஆர்சனிக் ஆல்பம் குளிகைகள் ஒரு குப்பி ஆகியவை கொண்டிருக்கும்.நகரப்பகுதிகளில் மருந்து 'கிட்' வினியோகம் ஏற்கனவே துவங்கப்பட்டுள்ள நிலையில், தெற்கு ஒன்றிய கிராமங்களுக்கும் வழங்க ஏற்பாடு நடக்கிறது. ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள ரேஷன் கடைகள் வாயிலாக, ஒரு ரேஷன் கார்டுக்கு ஒரு 'கிட்' என வழங்கப்பட உள்ளது. மருந்துப் பொருட்களை அதற்கான அட்டைப் பெட்டிகளில் போட்டு, பைகளில் இடும் பணியில் ஒன்றிய அலுவலர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இன்று முதல் மருந்து 'கிட்' வினியோகம் துவங்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் உள்ள, 39 ஊராட்சிகளுக்கும் கடந்த இரண்டு நாட்களாக நோய் எதிர்ப்பு மருந்துகள் அடங்கிய 'கிட்' அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இதுவரை, 85 சதவீத 'கிட்' வந்துள்ள நிலையில், ஊராட்சிகளுக்கு வினியோகிக்கப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE