உடுமலை:கணியூர் ஐயப்பன் கோவிலில், 8ம் ஆண்டு துவக்க விழா மற்றும் மண்டல பூஜை, கடந்த இரு நாட்களாக நடந்தது.நேற்று முன்தினம், ஜண்டை மேளத்துடன், குதிரை வாகனத்தில், ஐயப்பன் அமராவதி ஆற்றுக்கு எழுந்தருளினார். தொடர்ந்து, சுவாமி ஐயப்பனுக்கு, ஆறாட்டு உற்சவம் நடந்தது. 5:00 மணிக்கு, பல்வேறு திரவியங்களில் சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன. ஐயப்ப பக்தர்கள் பங்கேற்ற, வாண வேடிக்கை முழங்க, ஊர்வலமாக, கோவிலுக்கு சுவாமி வந்தார்.நேற்று காலை, 8:30க்கு, மூலவர் ஐயப்ப சுவாமிக்கு, 24 வகையான மூலிகை அபிேஷகம், 9 நதிகளில் இருந்து எடுத்து வந்த தீர்த்தாபிேஷகம், பால் குட ஊர்வலம் மற்றும் 108 சங்காபிேஷக பூஜைகள், உலக நலன் வேண்டி நடந்தது.மண்டல பூஜையை முன்னிட்டு, சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE