உடுமலை:உடுமலை பகுதியில், வன எல்லை கிராமங்கள் மட்டுமன்றி, 60 கி.மீ., துாரம் வரை உள்ள கிராமங்களிலும், காட்டுப்பன்றிகள் முகாமிட்டு, பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.குறிச்சிக்கோட்டையில், பி.ஏ.பி., பாசனத்துக்கு, அதிகளவு மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அறுவடைக்கு தயாராக உள்ள பயிர்களை, காட்டுப்பன்றி கூட்டங்கள், இரவு நேரங்களில், துவம்சம் செய்து வருகின்றன.இதனால், இப்பகுதியில் நுாற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிட்ட மக்காச்சோளம் சேதமடைந்து, விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இரவு நேரங்களில், விளைநிலங்களுக்கு செல்லவே அச்சப்படும் நிலை உள்ளது. காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்தவும், உடனடியாக வனத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE