புதுடில்லி: 'டில்லி, ஹரியானா, பஞ்சாப், உத்தர பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களின் பல்வேறு பகுதிகளிலும், கடும் குளிர் காற்று வீசும் குளிர் காலங்களில் மது அருந்து வதை தவிர்க்க வேண்டும்' என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துஉள்ளது.
டில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில், கடும் குளிர் நிலவி வருகிறது. இந்நிலையில், இந்திய வானிலை மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டில்லி, ராஜஸ்தான் மற்றும் மேற்கு உத்தர பிரதேசம் ஆகிய பகுதிகளில், நாளை முதல், கடும் குளிர் காற்று வீசும். எனவே, மக்கள் வெளியே நடமாடுவதை முடிந்தவரை தவிர்க்கவும். 'விட்டமின் -- சி' சத்து உள்ள பழங்களை அதிகம் உட்கொள்ளவும். குளிர் காலம் என்பதாலும், ஆங்கில புத்தாண்டு நெருங்குவதாலும், அதை கொண்டாட, மது அருந்துவதை தவிர்க்கவும். கடும் குளிர் காற்று வீசும் போது, மது அருந்துவது, ரத்தத்தின் வெப்ப நிலையை குறைத்துவிடும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE