புதுடில்லி: கடந்த, 2019 - 2020 நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை, இதுவரை, 4.15 கோடி பேர், நேர்மையாக தாக்கல் செய்துள்ளனர்.
தாக்கல் செய்வதற்கு நான்கு நாட்களே உள்ளதால், இதுவரை தாக்கல் செய்யாதவர்கள், உடனடியாக தாக்கல் செய்யும்படி, வரித் துறை வலியுறுத்தியுள்ளது.இது குறித்து, வருமான வரித் துறை வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த, 2019 - 2020 நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை, டிச., 26 வரையில், 4.15 கோடி பேர் செலுத்தியுள்ளனர். நீங்களும் செய்திருப்பீர்கள் என நம்புகிறோம். வரும், 31ம் தேதி வரை மட்டுமே அவகாசம் உள்ளது. கடைசி நேர நெரிசலை சமாளிக்க உடனடியாக உங்களுடைய கணக்கை தாக்கல் செய்யவும். அதன் பிறகு, அபராதம் விதிக்க நேரிடும். அதை தவிர்க்கவும்.தணிக்கை செய்யப்பட வேண்டிய வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்வதற்கு, 2021, ஜன., 31 வரை மட்டுமே அவகாசம் உள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE