சூலூர்:தடையை மீறி மூன்று இடங்களில் மக்கள் கிராம சபை கூட்டம் நடத்த முயன்ற தி.மு.க., வினரை போலீசார் கைது செய்தனர்.ஊராட்சிப்பகுதிகளில் மக்கள் கிராம சபை கூட்டங்களை நடத்தி மக்களின் குறைகளை கேட்க தி.மு.க., தலைமை கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியிருந்தது. இதையடுத்து, முதல்கட்டமாக, கலங்கல், கண்ணம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டன.
இந்நிலையில், இரண்டாவது கட்டமாக நேற்று ராசிபாளையம், ஊத்துப்பாளையம், கண்ணம்பாளையம் பகுதிகளில் கிராம சபை கூட்டம் நடத்த தி.மு.க.,வினர் ஏற்பாடு செய்திருந்தனர்.போலீசார் அனுமதி மறுத்ததால், தடையை மீறி கூடினர். ராசிபாளையத்தில், தி.மு.க., தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் தளபதி முருகேசன் உள்ளிட்ட, 60க்கும் மேற்பட்டவர்களும், ஊத்துப் பாளையத்தில் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட 40 பேர் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதேபோல், கண்ணம்பாளையத்தில் சண்முகம் உள்ளிட்ட, 30 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE