பொது செய்தி

தமிழ்நாடு

மலைப்பாதையில் தெருவிளக்கு இல்லை: இரவு நேர பயணத்தை தவிர்க்கும் மக்கள்

Added : டிச 28, 2020
Share
Advertisement
பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த தோலம்பாளையம் மலைப்பாதையில், தெருவிளக்குகள் இல்லாததால் இரவு நேர பயணத்தை அப்பகுதி மக்கள் தவிர்த்து வருகின்றனர்.பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த கூடலுார் பேரூராட்சிக்குட்பட்ட தன்னாசியப்பர் கோவிலில் இருந்து, தண்டிகை பெருமாள் கோவில் வழியாக தாயனுார் பாலம் வரை, 7.5 கி.மீ., துாரத்துக்கு 'நபார்டு' திட்டத்தில், 3 கோடியே, 80 லட்ச

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த தோலம்பாளையம் மலைப்பாதையில், தெருவிளக்குகள் இல்லாததால் இரவு நேர பயணத்தை அப்பகுதி மக்கள் தவிர்த்து வருகின்றனர்.பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த கூடலுார் பேரூராட்சிக்குட்பட்ட தன்னாசியப்பர் கோவிலில் இருந்து, தண்டிகை பெருமாள் கோவில் வழியாக தாயனுார் பாலம் வரை, 7.5 கி.மீ., துாரத்துக்கு 'நபார்டு' திட்டத்தில், 3 கோடியே, 80 லட்ச ரூபாய் செலவில் பிரமாண்ட மலைப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தால் தோலம்பாளையம், தாயனுார் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து காரமடை வராமல் மலைப்பாதை வழியாக செல்வபுரம், திருமலைநாயக்கன்பாளையம் வழியாக மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள வீரபாண்டி பிரிவு வந்து, அங்கிருந்து சத்தி ரோடு மற்றும் கோவைக்கு செல்லலாம்.இப்பாதையை பயன்படுத்தி தோலம்பாளையம், கோபாநாரி வழியாக கேரளாவுக்கும், பில்லுார், மஞ்சூர் வழியாக ஊட்டிக்கும் செல்லலாம். இதனால் துாரம் மற்றும் பயண நேரம் குறையும்.அன்றாடம் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.பெரியநாயக்கன்பாளையத்திலிருந்து தோலம்பாளையம், தாயனுார் செல்பவர்களுக்கு முக்கிய பாதையாக உள்ளது. மலைப்பாதையான இதில் தெருவிளக்குகள் இல்லாததால், இரவு நேரத்தில் இச்சாலையை பயன்படுத்த மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். திருடர்கள் பயம் இருப்பதால் பலரும் பயன்படுத்துவதை தவிர்க்கின்றனர்.இது குறித்து மருதுார், காளம்பாளையம் ஊராட்சிகள், கூடலுார் பேரூராட்சி மக்கள் கூறுகையில்,'மலைப்பாதையில் அதிக வாகனங்கள் செல்கின்றன. ஆனால், தெருவிளக்குகள் இல்லாததால், இப்பாதையை வாகன ஓட்டிகள் இரவு நேரத்தில் பயன்படுத்துவதில்லை. தெருவிளக்குகளை அமைக்க உள்ளாட்சி நிர்வாகம் முன்வர வேண்டும் என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X