அன்னூர்:பச்சாபாளையம் ஊராட்சியில், கவுசிகா நதி செல்லும் பள்ளம் புதர்மண்டி பராமரிப்பு இல்லாமல் உள்ளது.கோவைக்கு மேற்கே, குருடி மலையில் உருவாகி, பெரியநாயக்கன்பாளையம், எஸ்.எஸ்.குளம், அன்னூர், சூலூர் ஒன்றியங்கள் வழியாக, நொய்யல் ஆற்றில் சென்று கவுசிகா நதி கலக்கிறது. ஆனால், மழை நீர் செல்லும் வழித்தடங்களில் ஆக்கிரமிப்பு,போதுமான மழை இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அதிக மழை பெய்யும் போது மட்டுமே கவுசிகா நதி பள்ளத்தில் நீர் செல்கிறது. கவுசிகா நதியை உயிர்பிக்க, பல இடங்களில், நீர் செறிவூட்டும் கிணறுகள், தடுப்பணைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.எனினும், பச்சாபாளையம் ஊராட்சியில், கவுசிகா நதி செல்லும் பள்ளத்தில், 500 மீட்டர் தூரத்திற்கு, செடிகள், புதர்கள், கட்டுமான கழிவுகள் மண்டிக் கிடக்கின்றன. இதனால் மழைநீர் வந்தாலும் கூட இந்தப் பள்ளத்தில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.'நீர் சென்றாலும், குப்பையோடு கலந்து அடித்து செல்லப்படும் நிலை உள்ளது. எனவே, பச்சாபாளையம், நாரணாபுரம், மசக்கவுண்டன்செட்டிபாளையம் ஊராட்சிகளில், கவுசிகா நதி செல்லும் பள்ளங்களில், தூர்வார பச்சாபாளையம் ஊராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்', என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE