பொது செய்தி

தமிழ்நாடு

அசோக ஸ்தூபியை பராமரிக்க ஊராட்சி நிர்வாகம் முடிவு

Added : டிச 28, 2020
Share
Advertisement
மேட்டுப்பாளையம்:அத்திக்கடவில் உள்ள, அசோக ஸ்தூபியை பராமரிக்க, கெம்மாரம்பாளையம் ஊராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, கெம்மாரம்பாளையம் ஊராட்சி மன்ற சாதாரண கூட்டம், தலைவர் நிர்மலா தலைமையில் நடந்தது. கூட்டத்தில்,பில்லூர் அணை அருகே, அத்திக்கடவில் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு சொந்தமான அசோக ஸ்தூபி உள்ளது. கெத்தை, பரளி, பில்லூர்

மேட்டுப்பாளையம்:அத்திக்கடவில் உள்ள, அசோக ஸ்தூபியை பராமரிக்க, கெம்மாரம்பாளையம் ஊராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, கெம்மாரம்பாளையம் ஊராட்சி மன்ற சாதாரண கூட்டம், தலைவர் நிர்மலா தலைமையில் நடந்தது. கூட்டத்தில்,பில்லூர் அணை அருகே, அத்திக்கடவில் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு சொந்தமான அசோக ஸ்தூபி உள்ளது. கெத்தை, பரளி, பில்லூர் அணை ஆகிய நீர்மின் திட்டங்களை நினைவு கூறும் வகையில், இந்த ஸ்தூபி அமைக்கப்பட்டது. சரியாக பராமரிப்பு பணிமேற்கொள்ளப்படாததால், மரங்கள் வளர்ந்து புதராக காட்சியளிக்கிறது. இந்த வளாகத்தை சுத்தம் செய்து, ஊராட்சி சார்பில், அசோக ஸ்தூபியை பராமரிக்க மன்றம் முடிவு செய்துள்ளது.மேலும் இக்கூட்டத்தில்; கெம்மாரம்பாளையம் ஊராட்சியில் 'அம்மா மினி கிளினிக்' அமைத்தல், ஊராட்சிக்குட்பட்ட, காவியா கார்டன், ஜெ. ஜெ. நகர், சீனிவாசா கார்டன், பொம்மநாயக்கன் தோட்டம் ஆகிய பகுதிகளில் உள்ள, மேல்நிலை தொட்டிகளுக்கு, குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குதல் போன்ற கோரிக்கைகளைவலியுறுத்தி வார்டு உறுப்பினர்கள் பேசினர். ஊராட்சி செயலர் ராஜேஷ்குமார் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X