உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :
சி.கார்த்திகேயன், சாத்துார், விருதுநகர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
வட்டார போக்குவரத்து, வருவாய், பத்திர பதிவு, உள்ளாட்சி, சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகளிடம் இருந்து, மூன்று மாதத்தில், 20 கோடி ரூபாய்க்கு மேலான தங்கம், ரொக்கம் ஆகியவற்றை, லஞ்ச ஓழிப்புத்துறை பறிமுதல் செய்துள்ளது.
இந்த, 'ஏ கிரேடு' அரசு அதிகாரியின் மாத சம்பளம், 1 லட்சம் ரூபாய் வரை இருக்கும். இது தவிர, அரசிடம் இருந்து, பல சலுகைகளையும் அவர் பெறுகிறார்.எந்த வகையில் எல்லாம், லஞ்சம் பெறலாம் என்பது, அரசு அதிகாரிகளுக்கு அத்துப்படி.சம்பளம், 1 லட்சம் ரூபாய் வாங்கினாலும், 'கிம்பளம்' என்ற வகையில், மாதந்தோறும், 5 லட்சம் ரூபாய்க்கு மேல், லஞ்சம் பெறுகின்றனர்.

லஞ்சம் பெறும் அதிகாரிகள், பெரும்பாலும் தண்டிக்கப்படுவதே இல்லை. லஞ்சம் பெற்று குவித்த பணத்தில், கொஞ்சம் எடுத்து வீசி, தப்பி விடுகின்றனர்.எந்த தவறு செய்தாலும், தப்பி விடலாம் என்ற நம்பிக்கை தான், அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதற்கு, முக்கிய காரணம்.லஞ்சம் பெற்ற அதிகாரியை, 'சஸ்பெண்ட்' செய்வது எல்லாம் வேலைக்கு ஆகாது; பதவி மற்றும் சொத்து பறிப்பு தான் தீர்வாக அமையும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE