அவிநாசி:அவிநாசியில், மனைவி இறந்த சோகம் தாங்காமல், கணவரும் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியது.திருப்பூர் மாவட்டம், அவிநாசி நேரு வீதியை சேர்ந்தவர் பெருமாள்மூர்த்தி, 66; கருவூல துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அவரது மனைவி, ராதா, 60. வருவாய் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.கடந்த, 24ம் தேதி, ராதாவுக்கு, திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
அவரை, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்த பெருமாள் மூர்த்தி, இரண்டு நாட்கள் உடனிருந்து கவனித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு சென்றுள்ளார்.நேற்று அதிகாலை, 3:30 மணிக்கு, மருத்துவமனையில் இருந்து பெருமாள் மூர்த்தியை தொடர்பு கொண்ட அவரது மகன், 'தாய் இறந்து விட்டார்' என்ற தகவலை கூறியுள்ளார்.
அதிர்ச்சியில் உறைந்த பெருமாள் மூர்த்தி, மயக்கமடைந்தார்.அருகேயுள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்ட நிலையில், 'மாரடைப்பால் ஏற்கனவே இறந்துவிட்டார்' என, டாக்டர்கள் கூறியுள்ளனர். இறப்பிலும் இணை பிரியாத தம்பதியின் மறைவு, அவிநாசி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE