சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கார் கண்ணாடி உடைப்பு: கோவையில் ஒருவர் கைது

Added : டிச 28, 2020
Share
Advertisement
கோவை:ஈ.வெ.ரா., படம் ஒட்டப்பட்டிருந்த கார் கண்ணாடியை, கல் வீசி உடைத்த நபர் கைது செய்யப்பட்டார்.கோவை லாலி ரோட்டை சேர்ந்தவர் ஞானவேல், 35. புகைப்பட கலைஞரான இவர் ஈ.வெ.ரா., ஆதரவாளர். தனது காரில் ஈ.வெ.ரா., படம், கருத்துகள் அடங்கிய ஸ்டிக்கரை ஒட்டியுள்ளார்.நேற்று காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். லாலி ரோட்டில் வரும்போது பைக்கில் வந்த இருவர், கார் கண்ணாடி மீது கல் வீசியதால்
 கார் கண்ணாடி உடைப்பு: கோவையில் ஒருவர் கைது

கோவை:ஈ.வெ.ரா., படம் ஒட்டப்பட்டிருந்த கார் கண்ணாடியை, கல் வீசி உடைத்த நபர் கைது செய்யப்பட்டார்.கோவை லாலி ரோட்டை சேர்ந்தவர் ஞானவேல், 35. புகைப்பட கலைஞரான இவர் ஈ.வெ.ரா., ஆதரவாளர். தனது காரில் ஈ.வெ.ரா., படம், கருத்துகள் அடங்கிய ஸ்டிக்கரை ஒட்டியுள்ளார்.நேற்று காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். லாலி ரோட்டில் வரும்போது பைக்கில் வந்த இருவர், கார் கண்ணாடி மீது கல் வீசியதால் நொறுங்கியது. பைக்கில் தப்பிய அவர்களை காரில் துரத்திய ஞானவேல், வேளாண் பல்கலை முன் தடுத்து நிறுத்தினார்.தகராறு ஏற்பட்ட நிலையில், மீண்டும் கார் கண்ணாடிகளை அடித்து நொறுக்கிவிட்டு, இருவரும் பைக்கில் தப்பினர்.இதுகுறித்து ஞானவேல் ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார், வடவள்ளியை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் ராஜேஷ், 25, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X