சூலூர்:"குழந்தைகளுடன் நண்பர்களாக பழகி, அவர்களின் பிரச்னைகளை தீர்க்க வேண்டும்," என, திறனாக்க பயிற்சி முகாமில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு வல்லுனர்கள் அறிவுறுத்தினர்.கோவை மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலகத்தின் சார்பில், சூலூர் ஒன்றியத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட, ஊராட்சி தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கு, குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பு குறித்த திறனாக்க பயிற்சி அளிக்கப்பட்டது.குழந்தை பாதுகாப்பு, கடத்தல் தடுப்பு, குழந்தை திருமணம் தடுப்பு, குழந்தைகளை முறையாக தத்தெடுத்தல் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலக வல்லுனர் புவனேஸ்வர் பேசியதாவது: பாதிப்புக்கு உள்ளாகும் குழந்தைகளை கண்டறிந்து தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும். ஊராட்சி தலைவர், கிராம நிர்வாக அலுவலர், செவிலியர், அங்கன்வாடி பணியாளர்கள் கொண்ட, குழந்தைகள் பாதுகாப்பு குழுவை அமைக்க வேண்டும்.குழந்தைகளுக்கு எதிராக துன்புறுத்தல்கள் நடப்பதாக கேள்வி பட்டால், உடனடியாக போலீசுக்கும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலகத்துக்கும், சைல்டு லைனுக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும். குழந்தைகளுடன் நண்பர்களாக பழகி, அவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணவேண்டும். என்று பேசினார்.மேலும் லாவன்யா, தீபா ஆகிய குழந்தை பாதுகாப்பு வல்லுனர்கள் உளவியல் ரீதியாக எவ்வாறு குழந்தைகளை அனுகி பிரச்னைக்கு தீர்வு காண்பது மற்றும் சட்ட ரீதியாக எதிர்கொள்வது குறித்து பயிற்சி அளித்தனர். பி.டி.ஓ.,க்கள் சுப்புலட்சுமி, ஷீலா மற்றும் ஊராட்சி தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE