பொது செய்தி

தமிழ்நாடு

மின் கட்டணத்தில் கூடுதல் சலுகை :மாநில பொதுக்குழுவில் தீர்மானம்

Added : டிச 28, 2020
Share
Advertisement
பெ.நா.பாளையம்:தையல் தொழிலுக்கு மின் கட்டணத்தில் கூடுதல் சலுகை வழங்க வேண்டும் என, தமிழ்நாடு தையல்கலை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.நரசிம்மநாயக்கன்பாளையத்தில் தமிழ்நாடு தையல்கலை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க மாநில பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. நிகழ்ச்சிக்கு,மாநில தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். பொது செயலாளர் சுந்தரம்,

பெ.நா.பாளையம்:தையல் தொழிலுக்கு மின் கட்டணத்தில் கூடுதல் சலுகை வழங்க வேண்டும் என, தமிழ்நாடு தையல்கலை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.நரசிம்மநாயக்கன்பாளையத்தில் தமிழ்நாடு தையல்கலை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க மாநில பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. நிகழ்ச்சிக்கு,மாநில தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். பொது செயலாளர் சுந்தரம், பொருளாளர் மோகன்தாஸ் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், தையல் தொழிலாளர்களுக்கு தனிநல வாரியம் அமைத்தல், ஓய்வூதியதாரர்களுக்கு நிலுவைத்தொகையை வழங்க வேண்டும். தமிழக அரசால் வழங்கப்படும் சீருடைகளை, மகளிர் தையல் கலைஞர்களிடம் ஒப்படைக்க வேண்டும். நகர, கிராமப்புற நலிந்த தையல் தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்குதல்.தையல் தொழிலுக்கு சலுகை கட்டணத்தில், மின்சாரம் வழங்க வேண்டும். ஒய்வூதியத் தொகை, ஆயிரமாக இருப்பதை ஐந்தாயிரமாக உயர்த்தி வழங்குதல், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இச்சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் சீத்தாபதி, செயலாளர் மஞ்சு, பொருளாளர் கண்ணப்பன் உள்ளிட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X