95 சதவீதம் பேரை காக்கும்பிரிட்டனில், ஆக்ஸ்போர்டு பல்கலை மற்றும் 'அஸ்ட்ராஜெனெகா' நிறுவனம் இணைந்து கொரோனாவுக்கான தடுப்பூசியை தயாரித்துள்ளன.
நம் நாட்டில், புனேவை சேர்ந்த, 'சீரம்' நிறுவனம், இந்த தடுப்பூசியை தயாரித்து வருகிறது. இந்நிலையில், அஸ்ட்ராஜெனெகா நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி பாஸ்கல் சோரியோட், நேற்று கூறுகையில், “அமெரிக்காவின், 'பைசர் மற்றும் மாடர்னா' தடுப்பூசிகளுக்கு மாற்றாக உள்ள எங்கள் தடுப்பூசி, 95 சதவீத நோயாளிகளை குணப்படுத்தும்,” என்றார்.
தேசிய பணிக்குழு தயார்புதிய குணாதிசயங்களுடன் பரவும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரை கண்டறிந்து, நாட்டில் அதன் பரவலை தடுக்க தேவையான ஏற்பாடு களை, தேசிய பணிக்குழு செய்து வருகிறது. பிரிட்டனில் இருந்து வருவோர் மட்டுமல்லாமல், அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களிலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில், 5 சதவீதம் பேரின் மாதிரிகளை சேகரித்து, அவற்றை பரிசோதனைக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதை கண்காணிக்க, சிறப்பு குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. புதுடில்லி, டிச. 28-
'பிரிட்டனில் இருந்து பரவும் புதிய கொரோனா வைரசுக்காக, தற்போது அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை நடைமுறைகளை மாற்றத் தேவையில்லை' என, தேசிய பணிக்குழு அறிவுறுத்தி உள்ளது.கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, மத்திய அரசு, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக, என்.டி.எப்., எனப்படும், தேசிய பணிக்குழு அமைக்கப்பட்டது. வைரஸ் பரவலை தடுக்க எடுக்கப்படும் முயற்சிகளை, இந்த குழு ஒருங்கிணைத்து செயல்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.இதற்கிடையே பிரிட்டனில், புதிய குணாதிசயங்களுடன், கொரோனா வைரஸ் வேகமாக பரவத் துவங்கியது. இதையடுத்து, நம் நாட்டில், பிரிட்டனில் இருந்து வரும் பயணியருக்கு, பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தேசிய பணிக்குழுவின் ஆலோசனைக் கூட்டம், நேற்று முன்தினம் டில்லியில் நடந்தது. ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் இணை தலைவர் டாக்டர் வினோத் பால் தலைமையில் நடந்த அந்தக் கூட்டத்தில், கொரோனா பரிசோதனை, சிகிச்சை மற்றும் கண்காணிப்பு யுக்திகள் குறித்து, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், 'நிடி
' உறுப்பினரும், ஐ.சி.எம்.ஆர்., பொது இயக்குனர் டாக்டர் பல்ராம் பார்கவாவும் பங்கேற்றார்.இந்த புதிய கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்க, அந்த கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. இறுதியாக, தற்போது வைரசுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை வழிமுறைகளை, புதிய வைரசை கருத்தில் வைத்து, மாற்றத் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE