பொது செய்தி

தமிழ்நாடு

மதுரை சாந்திசதன், ராஜன்குரோவ் அபார்ட்மென்ட்களில் தினமலர் கோலத்திருவிழா

Added : டிச 28, 2020
Share
Advertisement
மதுரை : தினமலர் மற்றும் ஸ்ரீஜெயபிரபா ஜூவல்லர்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் மதுரை கோச்சடை சாந்திசதன் மற்றும் துவரிமான் ராஜன்குரோவ் அபார்ட்மென்ட்களில் நடந்த மார்கழி திருவிழா கோலத்திருவிழா போட்டியில், வண்ணங்களை எழில் கொஞ்சும் வடிவங்களாக்கி பெண்கள் கோலமிட்டு அசத்தினர். வீணையை ரசிக்கும் மயில், சமூகத்தை சீரழிக்கும் சோஷியல் மீடியாக்களின் அவலம், அகல் விளக்கேந்திய

மதுரை : தினமலர் மற்றும் ஸ்ரீஜெயபிரபா ஜூவல்லர்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் மதுரை கோச்சடை சாந்திசதன் மற்றும் துவரிமான் ராஜன்குரோவ் அபார்ட்மென்ட்களில் நடந்த மார்கழி திருவிழா கோலத்திருவிழா போட்டியில், வண்ணங்களை எழில் கொஞ்சும் வடிவங்களாக்கி பெண்கள் கோலமிட்டு அசத்தினர்.

வீணையை ரசிக்கும் மயில், சமூகத்தை சீரழிக்கும் சோஷியல் மீடியாக்களின் அவலம், அகல் விளக்கேந்திய காரிகை, தோகை விரித்தாடும் மயில், ஒருபக்கம் பிள்ளையார் மறுபக்கம் மயிலாய் மாறும் அதிசயம், கண் திறந்து அருளும் அழகிய பெருமாள், பூக்கோலம், பட்டுச் சேலை பார்டரில் ஜோடி மயில்கள் என கண்ணை கவரும் விதங்களில் வண்ணங்களை துாவி விருந்தளித்தனர். கைகளால் மட்டும் பொடி துாவும் காலம் மாறிவிட்டதை போல சல்லடை, காபி வடிகட்டி, ஸ்பூன், உருண்டை கற்களை கொண்டு உருவங்களை வரைந்து அசத்தினர்.

கலாசாரத்தை மறக்கவில்லைகாலை 8:00 மணிக்கே வண்ணங்களுடன் வந்த பெண்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சதுர இடத்தில் இரண்டு மணி நேரம் கோலம் வரைந்தனர். தங்களைச் சுற்றி மாய உலகத்தை அமைத்துக் கொண்டு அதை வண்ணங்களால் நிரப்பி மகிழ்ந்தனர். ஒவ்வொரு உருவத்திற்கு ஏற்ப கோலப்பொடிகளை பார்த்து பார்த்து தேர்வு செய்து பொறுமையாக வரைந்து அசத்தினர். கோலமிடுவதில் இன்னமும் நாங்கள் கலாசாரத்தை மறக்கவில்லை என்பது போல அழகு கோலங்களையும் நவீனத்தை ஏற்றுக் கொள்வதில் தயக்கமில்லை என்பது போல கலாசாரமும் பண்பாடும் புதுமையும் கோலங்களில் பின்னி கிடந்தன.

2020ல் கொரோனா தொடங்கி லாக்டவுன், ஆன்லைன் வகுப்பு, விவசாய முன்னேற்றம் என புள்ளி விவர பட்டியலை கோலமாக்கி ஆச்சர்யப்படுத்தினர். கோலத்தில் நகைச்சுவையும் காட்டமுடியும் என்பதற்கேற்ப தலையில் கொண்டை வைத்த வடிவேலு படத்தை வரைந்து 'வாட் பீலிங்… பீ ேஹப்பி' என்று வரைந்து பார்ப்பவர்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தனர். கொரோனா விதிமுறைகளை பின்பற்றி முகக்கவசம் அணிந்து கோலமிட்டனர்.குடியிருப்போர் சங்கம்சாந்திசதன் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் பாஸ்கர், செயலாளர் பாலகுரு, நிர்வாகிகள் சுரேஷ், தனசேகர், வேணுகோபால், கமலேஸ்வரி ஏற்பாடுகளை செய்தனர். 46 பெண்கள் 23 ஜோடிகளாக போட்டியில் பங்கேற்றனர். மைதானத்தில் வரிசையாக பெண்கள் கோலமிட ஏற்பாடு செய்யப்பட்டது.

மதுரை செந்தமிழ் கல்லுாரி துணை முதல்வர் ரேவதி சுப்புலட்சுமி, ஜெயின் வித்யாலயா பள்ளி தமிழாசிரியை சாந்தி நடுவர்களாக பங்கேற்று வெற்றியாளர்களை தேர்வு செய்தனர். கமலேஸ்வரி, திவ்யா முதல் பரிசு, ஜெயஸ்ரீ, வாணி ஸ்ரீ இரண்டாம் பரிசு, முத்துலட்சுமி, ஸ்ரீமாதங்கி மூன்றாம் பரிசு பெற்றனர். சுகந்தி, ஸ்வேதா ஜோடிக்கு மில்கா வொண்டர் கேக்கின் சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.வெற்றி பெற்றவர்களுக்கு மதுரை ஸ்ரீஜெயபிரபா ஜூவல்லர்ஸ் இயக்குனர் கே.வி.கே.ஆர்.பிரபாகரன் பரிசுகளை வழங்கினார். கோலப்போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.ராஜன்குரோவ் அபார்ட்மென்ட்டில் பூக்கோலம், மயில்கோலம், பிள்ளையாருடன் இணைந்த சிவன் என ரங்கோலி வடிவில் 35 பெண்கள் கோலமிட்டனர். கரு, டிசைன், வடிவம், நிறப்பொருத்தம், புதுமைத்தன்மை அடிப்படையில் கோலங்கள் தேர்வு செய்யப்பட்டன.வீட்டு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ராஜபாண்டியன், துணைத்தலைவர் பிரதாப், செயலாளர் பிரபாகரன் ஏற்பாடுகளைச் செய்தனர். இதில் பிரியதர்ஷினி, ேஹமஸ்ரீ முதல்பரிசு, மலர்விழி 2வது பரிசு, புதுமலர் 3ம் பரிசு பெற்றனர். இவர்களுக்கு ஸ்ரீஜெயபிரபா ஜூவல்லர்ஸ் இயக்குனர் கே.வி.கே.ஆர்.பிரபாகரன் பரிசுகளை வழங்கினார்.நியூ திருப்பதி மசாலா அன்ட் அப்பளம், மதுரை பாண்டியன் அப்பளம், மில்க்கா வொண்டர்கேக் மற்றும் அல்ட்ரா டிஸ்கவுண்ட் இணைந்து வழங்கின.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X