பொது செய்தி

தமிழ்நாடு

மழை நீர் சேகரிப்பு திட்டத்தால் நிரம்பிய ஊரணி

Added : டிச 28, 2020
Share
Advertisement
முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே மைக்கேல்பட்டினத்தில் மழைநீர் சேகரிப்பு திட்டத்தின் மூலம் தொடர்ந்து ஊரணி நிரம்பியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். முதுகுளத்துார் அருகே மைக்கேல்பட்டினம் கிராமத்தில் 2001-02ல் வீடுகள்மற்றும் ஊரணியில் மழைநீர் சேமிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டது.பின் மழைநீர் வீணாகாமல் ஊரணியில் சேமித்து வந்தனர். ஊரணியில் உள்ள தண்ணீரை

முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே மைக்கேல்பட்டினத்தில் மழைநீர் சேகரிப்பு திட்டத்தின் மூலம் தொடர்ந்து ஊரணி நிரம்பியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

முதுகுளத்துார் அருகே மைக்கேல்பட்டினம் கிராமத்தில் 2001-02ல் வீடுகள்மற்றும் ஊரணியில் மழைநீர் சேமிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டது.பின் மழைநீர் வீணாகாமல் ஊரணியில் சேமித்து வந்தனர். ஊரணியில் உள்ள தண்ணீரை சுற்றியுள்ள கிராமமக்கள் விவசாயத்திற்கும் பயன்படுத்தி வருகின்றனர். 2003ல் ரூ.3 லட்சத்தில் ஊரணி கரையை பலப்படுத்தி சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக மழை பொய்த்து போனதால் ஊரணியில் குறைந்தளவு தண்ணீரை தேங்கியது.

இதனால் கிராம மக்கள் சிரமப்பட்டனர்.இந்தாண்டு பருவமழை நன்கு பெய்ததால் வீடுகளில் அமைக்கப்பட்டுஉள்ள பழைய மழைநீர் சேமிப்பு உள்கட்டமைப்பு வசதியினால் ஊரணியில் தண்ணீர் வரத்து அதிகமானது. இதன்மூலம் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஊரணியில் உள்ள தண்ணீரால் அருகில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயருவதால், தண்ணீரின் தன்மை மாறும் நிலை உருவாகியுள்ளது.முதுகுளத்துார் ஒன்றியத்தில் மைக்கேல்பட்டினம் கிராமத்தில் வீடுகளில் கடந்த பல ஆண்டுகளாக மழைநீர் சேமிப்பு திட்டத்தை பயன்படுத்திவருவதால் மழைநீர் சேமிப்பிற்கு பெயர் பெற்ற கிராமம் என்றும் அழைக்கப்படுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X