மினி கிளினிக் திறக்கப்படுமா: பொதுமக்கள் எதிர்பார்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மினி கிளினிக் திறக்கப்படுமா: பொதுமக்கள் எதிர்பார்ப்பு

Added : டிச 28, 2020
Share
திருவாடானை : திருவாடானை தாலுகாவில் மினி கிளினிக் திறக்காததால் பொதுமக்கள் ஏமாற்றம்அடைந்துள்ளனர். திருவாடானை தாலுகாவில் 10க்கும் மேற்பட்டோர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர் .எஸ்.பி.பட்டினம், தொண்டி, நம்புதாளை, பாண்டுகுடி உள்ளிட்ட ஊர்களில் தொற்று அதிகமாக இருந்தது. இதனால் தொண்டியில் கொரோனா சிகிச்சை மையம் திறக்கப்படும் என்று அறிவிக்கபட்டு அத்திட்டம் பின்பு

திருவாடானை : திருவாடானை தாலுகாவில் மினி கிளினிக் திறக்காததால் பொதுமக்கள் ஏமாற்றம்அடைந்துள்ளனர்.

திருவாடானை தாலுகாவில் 10க்கும் மேற்பட்டோர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர் .எஸ்.பி.பட்டினம், தொண்டி, நம்புதாளை, பாண்டுகுடி உள்ளிட்ட ஊர்களில் தொற்று அதிகமாக இருந்தது. இதனால் தொண்டியில் கொரோனா சிகிச்சை மையம் திறக்கப்படும் என்று அறிவிக்கபட்டு அத்திட்டம் பின்பு கைவிடபட்டது.இந்நிலையில் அரசு மினி கிளினிக் திட்டத்தை அறிவித்தது. திருவாடானை தாலுகாவில் திறக்கப்படும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் மற்ற பகுதிகளில் திறக்கப்பட்டபோதும் இத் தாலுகாவில் திறக்கவில்லை.

தொண்டி சாகுல்ஹமீது கூறியதாவது:ராமநாதபுரம் மாவட்டத்தில் 66 மினி கிளினிக்குகள் திறக்கபட்டது. இதில் திருவாடானை தாலுகா ஒதுக்கபட்டுள்ளது. இப் பகுதியில் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருந்தும் அவசர மருத்துவ சிகிச்சைக்கு முதலுதவி கூட கிடைப்பதில்லை.கொரோனாவால் 10க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதால் மேலும் தொற்று பரவாமல்இருக்க விரைவில் மினி கிளினிக் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X