ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் ஹிந்து ஜனநாயக முன்னணி, தமிழ்நாடு அர்ச்சகர் சங்கம் சார்பாக, மாவட்டகுழு கூட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். மாநில அமைப்பாளர் கோதாவரி பூஜாரி முன்னிலை வகித்தார்.இதில், ஓய்வூதியம் ரூ.3ஆயிரம் வழங்கவும், இதற்கான வருமானச் சான்றிதழ் உச்சவரம்பு ரூ. 72ஆயிரமாக உயர்த்திய முதல்வர் பழனிசாமி, அமைச்சர்களுக்கு நன்றி கூறினர்.இதேப்போல கிராம கோயில்களில் பணிபுரியும்பூஜாரிகளுக்கு மாதந்தோறும் ரூ.5000 ஊக்கத்தொகை வழங்க வேண்டும். கோயில்நிலங்களை பாதுகாக்க ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றபட்டுள்ளன. ராமநாதபுரம் தலைவர் சேகர், உச்சிபுளி தலைவர் சுந்தரமூர்த்தி பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE