பரமக்குடி : பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் ஜீவா நகரில் இ.கம்யூ., 96வது ஆண்டு துவக்க விழா, நல்லகண்ணு பிறந்தநாள் மற்றும் தங்கமணி நினைவுநாள் என முப்பெரும் நிகழ்ச்சி நடந்தது.
பரமக்குடி நகர் செயலாளர் பெருமாள் தலைமை வகித்தார். கைத்தறி சங்க மாநில தலைவர் ராதா, ஏ.ஐ.டி.யூ.சி., மாவட்ட செயலாளர் ராஜன், போக்குவரத்து கழக ஏ.ஐ.டி.யு.சி., கவுரவ தலைவர் செல்வராஜ் பேசினர்.கூட்டத்தில், வைகை ஆறு தரைப் பாலத்தை சீரமைக்க வேண்டும். வைகை ஆற்றின் புறவழிச்சாலையில் மின் விளக்குகளை அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE