திருவாடானை : திருவாடானையில் சில நாட்களாக மான்கள்இறப்பு அதிகரித்து வருகிறது.
மங்களக்குடி, அஞ்சுகோட்டை, சிறுகம்பையூர், ஓரியூர் உள்ளிட்ட கண்மாய்பகுதிக்கு அதிகமான மான்கள் வருகின்றன.சமீப நாட்களாக கீழஅரும்பூர், மண்டலகோட்டை, வலையன்வயல் உள்ளிட்ட சில கண்மாய்களில் மான்கள் இறந்து கிடந்தது. பத்து நாட்களுக்குள் பத்துக்கும் மேற்பட்ட மான்கள் இறந்தன. வனத்துறையினர் நாய்கள் கடித்து பலியானதாக கூறினர்.இது குறித்து செங்கமடை கிராம மக்கள் கூறியதாவது:இத் தாலுகாவில் உள்ள அனைத்து கண்மாய்களிலும் மான்கள் உள்ளன. மான்கள் இறப்பு குறித்து குறைவாக கணக்கிடப்பட்டு உள்ளது. அஞ்சுகோட்டை மற்றும் அரும்பூர் கண்மாய்களுக்குள் நிறைய மான்கள் அழுகிய நிலையில் கிடந்துஉள்ளது. சில மான்கள் நாய் கடிக்கு பலியாகியுள்ளன.
ஆனால் பெரும்பாலான மான்கள் நாய் கடிக்கு இறக்க வாய்ப்பில்லை. மான்கள் இறப்பிற்கான காரணத்தை ஆய்வு செய்து மான்களை பாதுகாக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE