மதுரை : மதுரையில் தமிழ்நாடு அரசு கூட்டுறவு துறை ஊழியர்கள் சங்க பேரவை கூட்டம் மாவட்ட தலைவர் முருகன் தலைமையில் நடந்தது.
மாவட்ட துணை தலைவர் சுந்தரமூர்த்தி வரவேற்றார். மாநில செயலாளர் நவநீத கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சீனியப்பா ஆண்டறிக்கை, பொருளாளர் மணி கண்டன் வரவு செலவு அறிக்கை சமர்ப்பித்தனர்.மாவட்ட துணை தலைவர்களாக ஜெயபிரகாஷ், அம்மையப்பன், இணை செயலாளர்களாக கார்த்திகேயன், ரேணுகா, மாநில செயற்குழு உறுப்பினர்களாக வெங்கடேசன், தீனதயாளன் தேர்வாயினர்.புதிய ஒய்வூதிய திட்டம் ரத்து செய்ய வேண்டும்.
பணியில் இறந்த அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு நிபந்தனைகளை தளர்த்தி பணியிடம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் நீதிராஜா. ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க பொருளாளர் விஜய பாஸ்கர், சத்துணவு ஊழியர் சங்க பொது செயலாளர் நுார்ஜகான், சங்க மாநில தலைவர் சவுந்தரராஜன் பேசினர். துணை தலைவர் சந்திரபோஸ் நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE