திருப்பரங்குன்றம் : தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை மாநில பொதுக்குழு கூட்டம் திருப்பரங் குன்றத்தில் நடந்தது.
தலைமை வகித்த நிறுவன தலைவர் ஜெயகார்த்தி கூறியதாவது: கொரோனா காலத்திலும் கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கிய முதல்வர் பழனிசாமிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளின் உரிமையாளருக்கும் காப்பீடு திட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும்.ஜல்லிக்கட்டு அன்று ஒரு அமர்விற்கு 300 மாடுபிடி வீரர்களை அனுமதிக்க வேண்டும். அவனியாபுரத்தில் தைப்பொங்கல் அன்று நடக்கும் ஜல்லிக்கட்டை அனைத்து சமுதாயத்தினரும் இணைந்து நடத்த வேண்டும்.
அல்லது அரசே நடத்த வேண்டும்.வட மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு, எருது கட்டு விளையாட்டிற்கு அனுமதி கேட்பவர்களுக்கு அனுமதியளிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம். என்றார். நிர்வாகிகள் மலைச்சாமி, மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE