சம்பவம் செய்தி

தமிழ்நாடு

களையிழந்த சபரிமலை சீசன் வாடகை வாகன ஓட்டிகள் தவிப்பு

Added : டிச 28, 2020
Share
Advertisement
ஒட்டன்சத்திரம் : சபரிமலை சீசன் இல்லாததால் ஒட்டன்சத்திரத்தில் டிராவல்ஸ் உரிமையாளர்கள், டிரைவர்கள் வாழ்வாதாரம் பாதித்துள்ளது.ஆண்டுதோறும் கார்த்திகை தொடங்கி தை வரை சபரிமலை சீசன் காலமாகும். இந்த நாட்களில் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து கடும் விரதத்திற்கு பின் சபரிமலை செல்வர். சபரிமலை செல்வதற்காகவே வேன், பஸ்களை டிராவல்ஸ்களில் புக்கிங் செய்வர். கொரோனா

ஒட்டன்சத்திரம் : சபரிமலை சீசன் இல்லாததால் ஒட்டன்சத்திரத்தில் டிராவல்ஸ் உரிமையாளர்கள், டிரைவர்கள் வாழ்வாதாரம் பாதித்துள்ளது.ஆண்டுதோறும் கார்த்திகை தொடங்கி தை வரை சபரிமலை சீசன் காலமாகும்.

இந்த நாட்களில் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து கடும் விரதத்திற்கு பின் சபரிமலை செல்வர். சபரிமலை செல்வதற்காகவே வேன், பஸ்களை டிராவல்ஸ்களில் புக்கிங் செய்வர். கொரோனா காரணமாக, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.இதனால் திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழநியில் இருந்து சபரிமலை செல்வோரின் எண்ணிக்கை குறைந்ததால், புக்கிங் கிடைக்காமல் டிராவல்ஸ் உரிமையாளர்கள் தவிப்பில் உள்ளனர். இது தவிர, சொந்த கார் வைத்திருப்பவர்கள், 'ஆக்டிங் டிரைவர்களை' அழைத்துச் செல்வர்.

தற்போது அவர்களும் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர்.புக்கிங் குறைவுவி.சவடமுத்து, சுற்றுலா வேன் உரிமையாளர்: கொரோனா 'நெகட்டிவ்' சான்றிதழ் வைத்திருந்தாலும், அங்கேயும் பரிசோதிக்க வற்புறுத்துகின்றனர். சபரிமலைக்கு அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை நிலையானதாக இல்லை. இதன் காரணமாகவும் பக்தர்கள் செல்லவில்லை. அதனால் இம்முறை டிராவல்ஸ் புக்கிங் குறைந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X