பழநி : பழநியில் வாகனங்களில் பம்பருடன் வந்தால் 'பைன்' செலுத்த வேண்டும் என மோட்டார் வாகன ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
பழநி பகுதிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா, சரக்கு வாகனங்கள் தினமும் ஆயிரக் கணக்கில் வந்து செல்கின்றன. தடையை மீறி, வாகனங்களில் முன் பகுதியில் பம்பர்கள் பொருத்தி உள்ளனர். இந்த வாகனங்கள் சாலையில் பயணித்தால் இனி அபராதம் கட்ட வேண்டும். ஒட்டன்சத்திரம், பழநி பகுதிகளில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஈஸ்வரன், ஸ்ரீதரன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அதில் விதிமீறிய ஏழு வாகனங்களுக்கு ரூ.3500 அபராதம் விதிக்கப்பட்டது. இனி வரும் காலங்களில் பழநி, ஒட்டன்சத்திரம் பகுதிகளில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு பைன் விதிக்கப்படும். எனவே வாகன ஓட்டுனர்களும், உரிமையாளர்களும் விதிகளுக்கு உட்பட்டு செயல்பட அறிவுறுத்தப்பட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE