தேனி : 'அம்மா மினி கிளினிக்' உரிய நேரம் வரை செயல்பட அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்.
தேனி மாவட்டத்தில் கடந்த வாரம் 'அம்மா மினி கிளினிக்' 14 இடங்களில் திறக்கப்பட்டது. இங்கு ஒரு டாக்டர், ஸ்டாப் நர்ஸ் நியமிக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் காலை 8:00 முதல் மதியம் 12:00 மணிவரை, மாலை 4:00 முதல் இரவு 7:00 மணிவரை என நாளுக்கு 7:00 மணிநேரம் பணியாற்ற வேண்டும்.சனி விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. காய்ச்சல், தலைவலி, வயிறு உபாதை என சிறு, சிறு பிரச்னை சிகிச்சையளிக்க தங்கள் பகுதியிலேயே மினிகிளினிக் அமைக்கப்பட்டதால் மக்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது.ஆனால் இங்கு டாக்டர், பணியாளர்கள் உரிய நேரத்திற்கு வந்து பணி நேரம் வரை இருந்து பணியாற்றுவதை சுகாதார துறையினர் கண்காணிக்க வேண்டும்.
சிலர் பணி முடியும் நேரத்திற்கு முன்னதாக வெளியில் செல்வதாகவும், பணிக்கு தாமதமாக வருவதாக புகார் வர துவங்கியுள்ளது.துவக்கத்திலேயே இப்பிரச்னைக்கு தீர்வு கண்டு முழுநேரமும் செயல்படுவதன் மூலம் மக்களுக்கான சேவையை மேம்படுத்த முடியும்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE