கூடலுார் : கம்பம் பள்ளத்தாக்கில் இரண்டாம் போக நெல் சாகுபடியை துவக்குவதற்கான ஆயத்த பணிகளை விவசாயிகள் செய்து வரும் நிலையில், பெரியாறு அணையில் திறந்து விடும் நீரின் அளவை குறைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
கம்பம் பள்ளத்தாக்கில் முதல்போக நெல் சாகுபடிக்கான அறுவடை பணி மும்முரமாக நடந்து வருகிறது. அறுவடை செய்வதற்கு முன்பே இரண்டாம் போக நெல் சாகுபடிக்காக வயல்களில் நாற்றாங்கால் அமைத்து நாற்றுகள் வளர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.நேற்று காலை 8.30 மணி நிலவரப்படி பெரியாறு அணையின் நீர்மட்டம் 121.30 அடியாக (மொத்த உயரம் 152 அடி) இருந்தது. அணையில் 108 அடிக்கு மேல் உள்ள நீரை தமிழகப்பகுதிக்கு வெளியேற்ற முடியும். இந்நிலையில் பயன்படுத்தக்கூடிய வகையில் உள்ள 13 அடி நீர் இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு போதுமானதாகும்.
ஆனால், தற்போது நீர்திறப்பு வினாடிக்கு 955 கன அடி இருப்பதால் நீர்மட்டம் வெகுவாக குறையும் வாய்ப்புள்ளது. இரண்டாம் போக சாகுபடியை முழுமையாக செய்வதற்கு அணையில் நீர்திறப்பை 500 கன அடியாக குறைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE