ஆண்டு முழுவதும் திராட்சை கிடைக்கும் பகுதி என்ற பெருமையை கம்பம் பள்ளத்தாக்கு பெற்றுள்ளது. மஹாராஷ்டிராவில் தாம்தன் சீட்லெஸ், மாணிக்சந்த், கருப்பு சீட்லெஸ் போன்ற ஏற்றுமதி மற்றும் ஒயின் ரக திராட்சைகள் அதிகம் பயிரிடப்படப்படுகின்றன. அங்கு டிசம்பர் முதல் மார்ச் மாதம் வரை அறுவடை செய்யப்படுகின்றன. இந்த திராட்சைகள் தற்போது தேனி, மதுரை தமிழகத்தின் பல பகுதிகளில் ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.140 வரை விற்பனையாகிறது. இதனால் கம்பம் பள்ளத்தாக்கில் விளையும் திராட்சை விலை குறைந்து கிலோ ரூ.25க்கு விற்கப்படுகிறது.
தொடர் மழையால் பழங்களுக்கு கலர் கிடைக்காதது, பழங்களில் உடைப்பு ஏற்பட்டதும் விலை குறைவுக்கு காரணமாகியுள்ளது.சுருளிப்பட்டி திராட்சை சாகுபடியாளர்கள் சங்க நிர்வாகி முகுந்தன் கூறுகையில், ''மஹாராஷ்டிரா திராட்சை வரத்தால் 4 மாதங்களுக்கு கம்பம் பழத்திற்கு விலை கிடைக்காது. மார்ச்சிற்கு பின் 8 மாதங்களுக்கு கிராக்கி இருக்கும்'' என்றார். இதற்கிடையே கம்பம் பள்ளத்தாக்கு பழங்களை ஆனைமலையன்பட்டி ஒயின் தொழிற்சாலை நிர்வாகம் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE