பெரியகுளம் : தேனி மாவட்ட கூடைப்பந்தாட்ட 'நாக் அவுட் 'போட்டியில் பெரியகுளம் சில்வர் ஜூபிலி கிரீன்ஸ் அணி வெற்றி பெற்றது.
பெரியகுளம் சில்வர் ஜூபிலி ஸ்போரட்ஸ் கிளப் க்ரீன்ஸ் நடத்தும் 2ம் ஆண்டு மாவட்ட கூடைப்பந்தாட்ட போட்டி பி.எஸ்.டி., மைதானத்தில் துவங்கியது. போட்டிகள் நாக் அவுட், லீக் சுற்றுகளில் நடக்கிறது. நாக் அவுட் போட்டியை மாவட்ட கூடைப்பந்து கழக இணைச் செயலாளர் உமாகாந்தன் துவக்கி வைத்தார். துணை தலைவர் தாவூத்பாட்ஷாவிற்கு, வீரர்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.முதல் போட்டியில் போடி அணி 75:47 புள்ளிக்கணக்கில் வடுகபட்டி அணியை வென்றது. அடுத்த போட்டியில் பெரியகுளம் சில்வர் ஜூப்லி க்ரீன்ஸ் அணி 82:64 புள்ளி கணக்கில் ராயப்பன்பட்டி அணியை வென்றது.
அடுத்து விளையாடிய கூடலுார் அணி 82:55 புள்ளிக்கணக்கில் தேனி எல்.எஸ். மில் அணியை வென்றது. ஏற்பாடுகளை சில்வர் ஜூபிலி விளையாட்டு கழக செயலாளர் சிதம்பரசூரியவேலு நிர்வாகிகள் செய்துள்ளனர். இன்று இறுதிப் போட்டி நடக்கிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE