ஆண்டிபட்டி : சக்கம்பட்டி நன்மை தருவார்கள் திருத்தலம் ஐயப்ப சுவாமி கோயில் மார்கழி உற்ஷவ விழா நடந்தது.
முதல் நாளில் புலி வாகனத்தில் ஐயப்ப சுவாமி ஊர்வலத்தை ஹிந்து முன்னணி மாவட்ட செயலாளர் செல்வம் துவக்கி வைத்தார். மறு நாள் நிகழ்ச்சியில் கோயில் வளாகத்தில் உள்ள 49 அடி உயர மாகாளி அம்மனுக்கு 108 குடம் பாலாபிேஷகம் நடந்தது. முளைப்பாரி, தீச்சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். ஐயப்பசுவாமி சன்னதியில் பதினெட்டாம்படி விளக்கு பூஜை நடந்தது. விழாவில் ஆண்டிபட்டி எம்.எல்.ஏ.,மகாராஜன், பேரூராட்சி முன்னாள் தலைவர் ராமசாமி உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி முத்து வன்னியன் தலைமையில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
பெரியகுளம்:வடகரை கோதண்டராமர் கோயிலில் மார்கழி மாதம் பூஜை நடந்து வருகிறது. ராமர், சீதை, லட்சுமணன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு தினமும் அபிேஷகம் நடந்து வருகிறது. நேற்று கோதண்டராமர் ஆஞ்சநேயர் வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏற்பாடுகளை அர்ச்சகர் கோகுல் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.------
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE