போடி : வனப்பகுதியில் பழங்களின் மரங்கள் அழிந்து வருவதால், புழு, பூச்சிகளை உண்பதற்காக நீர் நிலைகளை நாடி வவ்வால்கள் வரத்துவங்கியுள்ளன.
வனப்பகுதியில் அடிக்கடி ஏற்படும் தீ விபத்துகளால் விலை உயர்ந்த, மூலிகை, பழமரங்கள் அழிந்து வருவகிறது. இங்கு சுற்றி திரிந்த வவ்வால்களுக்கு உணவு கிடைக்காத சிரமம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் பெய்த மழையால் போடி சுற்றுப்பகுதிகளில் கண்மாய்களில் நீர் வரத்து ஏற்பட்டது. புழு, பூச்சி, பழங்கள் கிடைக்காமல் தவித்த வவ்வால்களுக்கு, உணவிற்காக போடி பங்காருசாமி கண்மாய்க்கு வரத்துவங்கியுள்ளது. கண்மாய்களில் வாழும் புழு, பூச்சிகளையும், அருகே உள்ள தோட்டங்களில் உள்ள மா, கொய்யா பழங்களை உண்பதற்காக ஆயிரக்கணக்கான வவ்வால்கள் மரங்களில் சங்கமித்துள்ளன. மரங்களில் வவ்வால்கள் தலைகீழாக தொங்குவதையும், அதன் ஒலி கேட்டு ரசிக்க இயற்கை ஆர்வலர்கள் ரசித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE