கோயில்களில் சனிப்பெயர்ச்சி விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோயில்களில் சனிப்பெயர்ச்சி விழா

Added : டிச 28, 2020
Share
தேனி : தேனி பெத்தாட்சி விநாயகர் கோயில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், என்.ஆர்.டி., கணேச கந்த பெருமாள் கோயில்களில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று பரிகாரங்கள் செய்தனர். நேற்று அதிகாலை 5.22 மணிக்கு தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு சனீஸ்வர பகவான் இடம் மாறினார். இதற்காக இக்கோயில்களில் உள்ள சனீஸ்வர சுவாமிகளுக்கு

தேனி : தேனி பெத்தாட்சி விநாயகர் கோயில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், என்.ஆர்.டி., கணேச கந்த பெருமாள் கோயில்களில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று பரிகாரங்கள் செய்தனர்.

நேற்று அதிகாலை 5.22 மணிக்கு தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு சனீஸ்வர பகவான் இடம் மாறினார். இதற்காக இக்கோயில்களில் உள்ள சனீஸ்வர சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள், சிறப்பு அர்ச்சனைகள் நடந்தன. மேலும் மிதுனம், கடகம், துலாம், தனுசு, மகரம், கும்பம் உள்ளிட்ட பரிகார ராசிகாரர்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பெரியகுளம் வரதராஜப்பெருமாள் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா நடந்தது. அதிகாலை4:30 மணிக்கு கலச பூஜை, 16 வகையான திருமஞ்சனம் பூஜை நடந்தது. அதிகாலை 5:22 மணிக்கு சனீஸ்வரர் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார்.

சனி பகாவானுக்கு மகா தீபாரதனை நடந்தது.பரிகார பூஜைகள் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை அர்ச்சகர்கள, கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X