போடி : போடி அருகே மீனாட்சியம்மன் கண்மாயில் பிளாஸ்டிக் கழிவுகளின் தேங்கி பாதிப்பு ஏற்படுகிறது.தமிழக, கேரள பகுதியில் பெய்த மழையால் மீனாட்சிபுரம் மீனாட்சியம்மன் கண்மாயில் நீர் நிறைந்துள்ளது.
100 ஏக்கர் பரப்பளவு கொண்ட இங்கு தண்ணீர் தேங்குவதன் மூலம் சுந்தரராஜபுரம், விசுவாசபுரம், அம்மாபட்டி, பெருமாள்கவுண்டன்பட்டி, பத்ரகாளிபுரம், மீனாட்சிபுரம், காமராஜபுரம் உள்ளிட்ட கிராமங்களில் கிணறுகளில் தண்ணீர் பெருகுவதோடு 450 ஏக்கருக்கு மேல் பாசன வசதி பயன் பெறும் வகையில் உள்ளது.10 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் தேவைக்கு கைகொடுக்கிறது.போடி பகுதியில் டாஸ்மாக் பார்களில் இருந்து வெளியேறும் கழிவு பிளாஸ்டிக் டம்ளர், பாலிதீன் பைகள், கால்நடை கழிவுகளை கண்மாய்க்கு செல்லும் நீர்வரத்து வாய்க்காலில் கொட்டுவதால் அவை மீனாட்சியம்மன் கண்மாயில் சேர்ந்து தேங்குகிறது.
இதனால் மாசுபடுவதோடு இங்கு இனப்பெருக்கத்திற்காக வரும் கூழைக்கிடா, மஞ்சள் மூக்குநாரை, பிளமிங்கோ போன்ற பறவையினங்களுக்கு ஆபத்து உள்ளது. கழிவுகளை அகற்ற பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE