நாட்டின் முதல் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்; பிரதமர் மோடி துவக்கி வைத்தார்

Updated : டிச 28, 2020 | Added : டிச 28, 2020 | கருத்துகள் (38)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவிலேயே முதல் முறையாக ஓட்டுநர் இல்லாத தானியங்கி மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி டில்லியில் இன்று (டிச.,28) கொடியசைத்து துவக்கி வைத்தார்.டில்லி மெட்ரோ ரயில் சேவையை மேலும் நவீனப்படுத்தும் வகையில் ஓட்டுநர் இல்லாத தானியங்கி மெட்ரோ சேவை துவங்கப்பட உள்ளது. முதல்கட்டமாக டில்லி மெட்ரோவில் மூன்றாவது விரிவாக்கத்தில் கட்டமைக்கப்பட்ட வழித்தடங்களில்
PMModi, FlagOff, DriverlessMetro, MetroTrain, India's First, ஓட்டுநர் இல்லாத, மெட்ரோ,ரயில், பிரதமர் மோடி

புதுடில்லி: இந்தியாவிலேயே முதல் முறையாக ஓட்டுநர் இல்லாத தானியங்கி மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி டில்லியில் இன்று (டிச.,28) கொடியசைத்து துவக்கி வைத்தார்.

டில்லி மெட்ரோ ரயில் சேவையை மேலும் நவீனப்படுத்தும் வகையில் ஓட்டுநர் இல்லாத தானியங்கி மெட்ரோ சேவை துவங்கப்பட உள்ளது. முதல்கட்டமாக டில்லி மெட்ரோவில் மூன்றாவது விரிவாக்கத்தில் கட்டமைக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே இந்த தானியங்கி ரயில் சேவை செயல்படும். டில்லி மெட்ரோவின் தொழில்நுட்ப வல்லுநர் குழுவை சேர்ந்தவர்கள் கமாண்ட் சென்டரில் இருந்து, ரயிலின் புறப்படும் நேரம், நிற்கும் நேரம், ரயிலின் வேகத்தை தீர்மானித்து இயக்கவுள்ளனர்.


latest tamil news


கிழக்கு டில்லியில் இருந்து மேற்கு டில்லி வரை செல்லும் வழித்தடத்தில் இந்த தானியங்கி மெட்ரோ சேவைகள் பரிசோதனை செய்யப்பட்டு தற்போது தயார் நிலையில் உள்ளன. 7ம் எண் வழித்தடத்தில் முதற்கட்டமாக இந்த சேவை துவங்கப்படும் என்றும், இதன் செயல்பாடு எப்படி உள்ளது என்பதை கண்காணித்த பின் பிற வழித்தடங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் எனவும் டில்லி மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


latest tamil news


இந்தியாவிலேயே முதல் முறையாக இந்த வகை ஓட்டுநர் இல்லாத தானியங்கி மெட்ரோ ரயில் சேவையை காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் டில்லி முதல்வர் கெஜ்ரிவால் பங்கேற்றார்.

Advertisement




வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
28-டிச-202019:58:01 IST Report Abuse
J.Isaac உண்மையான பெயர், ஊரை போட தைரியமில்லாத பச்சோந்தி , நீங்கள் எல்லாம் ஏன் கருத்து எழுதுகிறீர்கள்.
Rate this:
Cancel
DMK வுக்கு வெற்றிக்கொடி கட்டு - முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம்,இந்தியா
28-டிச-202019:34:07 IST Report Abuse
 DMK வுக்கு  வெற்றிக்கொடி கட்டு அப்படியே ROBOT பிரதமர் கொண்டு வந்தாலும் நாடு உருப்படும்
Rate this:
Cancel
28-டிச-202017:46:23 IST Report Abuse
IndiaTamilan Kumar (Tamilagathil  Nallavarkal  Aatchikku VARAVENDUM ) பாரதம் வளர்ந்து வருகிறது.
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
29-டிச-202000:19:39 IST Report Abuse
தல புராணம்ரெண்டே பேரு தான் நல்லவங்க.. ஒருத்தன் செத்துட்டான்.. இன்னொருத்தன் பொறக்கவே இல்லை.....
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
29-டிச-202000:21:26 IST Report Abuse
தல புராணம்ஓட்டத் தெரியாதவன் கையிலே வண்டியும், பிரயாணிகளும் சீரழியிறத்துக்கு பதில், இது பரவாயில்லை தான்.. நாடு இருக்கிற நிலைமையை சொல்றேன்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X