பொது செய்தி

தமிழ்நாடு

படத்தின் வசூலுக்காக முதல்வரை சந்தித்தாரா விஜய்? : டுவிட்டரில் டிரெண்டிங்

Updated : டிச 28, 2020 | Added : டிச 28, 2020 | கருத்துகள் (45)
Share
Advertisement
சென்னை : தனது 'மாஸ்டர்' படம் பொங்கலுக்கு திரையிட வேலைகள் நடந்து வரும் நிலையில் தியேட்டரில் 100 சதவீதம் இருக்கைக்கு அனுமதி கோரி முதல்வரை சந்தித்து பேசி உள்ளார் நடிகர் விஜய். இதற்கு டுவிட்டரில் ஆதரவும், எதிர்ப்புமான கருத்துக்கள் எழுந்ததால் அவர் டிரெண்ட் ஆனார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி
Master, actorvijay, SaviourOfKollywoodVIJAY, எடப்பாடிகாலில்விழுந்தவிஜய்

சென்னை : தனது 'மாஸ்டர்' படம் பொங்கலுக்கு திரையிட வேலைகள் நடந்து வரும் நிலையில் தியேட்டரில் 100 சதவீதம் இருக்கைக்கு அனுமதி கோரி முதல்வரை சந்தித்து பேசி உள்ளார் நடிகர் விஜய். இதற்கு டுவிட்டரில் ஆதரவும், எதிர்ப்புமான கருத்துக்கள் எழுந்ததால் அவர் டிரெண்ட் ஆனார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி உள்ள படம் 'மாஸ்டர்'. அனிருத் இசையமைத்துள்ளார். விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார். இப்படம் கடந்த ஏப்ரல் 9ம் தேதியே வெளியாக வேண்டியது. ஆனால் கொரோனா பிரச்னை வந்ததால் தள்ளிப்போனது. பல படங்களும் ஓடிடியில் வெளியான நிலையில் மாஸ்டர் உறுதியாக தியேட்டரில் தான் வெளியாகும் என படக்குழு அறிவித்து இருந்தது. சமீபத்தில் தீபாவளியை ஒட்டி தியேட்டர்கள் 50 சதவீதம் இருக்கைகளுடன் திறக்கப்பட்டன. ஆனால் மக்கள் தியேட்டர்களுக்கு செல்ல ஆர்வம் காட்டாததால் முன்னணி நடிகர்களின் படங்கள் கூட வெளிவரவில்லை.


latest tamil news
இந்நிலையில் மக்களை தியேட்டருக்கு வரவழைக்க பெரிய நடிகர்களின் படங்கள் வந்தால் மட்டும் தான் சரியாக இருக்கும் என தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி விஜய்யின் மாஸ்டர் படத்தை வெளியிடும் வேலைகள் நடக்கின்றன. ஆனால் 50 சதவீத இருக்கைகளை கொண்டு படத்தை வெளியிட்டால் நிச்சயம் நஷ்டம் ஏற்படும். எனவே 100 சதவீதம் இருக்கைக்கு அனுமதி வழங்க வேண்டும் என தியேட்டர்கள் தரப்பில் பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இப்படியான சூழலில் முதல்வர் பழனிசாமியை, மாஸ்டர் படத்தின் நாயகன் விஜய் நேரில் சந்தித்து பேசி உள்ளார். தியேட்டரில் 100 சதவீதம் இருக்கைக்கு அனுமதி அளிக்க வேண்டும் என அவரது சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பல துறை நிறுவனங்களும் 100 சதவீதம் இயங்கி வரும் சூழலில் தியேட்டர்களுக்கும் அப்படி அனுமதி அளிக்க வேண்டும் என அவர் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. பொங்கலுக்கு மாஸ்டர் படத்தை வெளியிடும் வேலைகள் நடப்பதாலும், இது அவருடைய படம் என்பதாலும் விஜய்யே நேரில் சென்று முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.


latest tamil news
விஜய் - முதல்வர் சந்திப்பு தொடர்பாக சமூகவலைதளங்களில் பலரும் பல விதமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ''கொரோனா பிரச்னை, தியேட்டர்கள் திறப்பு தொடர்பாக இதுவரை எதுவும் பேசாமல் இருந்த விஜய், இப்போது தனது படம் ரிலீஸாகிறது என்றதும், தனது படத்தை ஓட வைப்பதற்காகவும், வசூலை ஈட்டுவதற்காக இப்படி முதல்வரை சந்தித்து பேசியிருக்கிறார்'' எனவும், "தியேட்டரில் கூட்டம் கூடினால் கொரோனா பரவும் என அரசு 50 சதவீத இருக்கைக்கு அனுமதியளித்த நிலையில், 100 சதவீத இருக்கைக்கு அனுமதி கேட்டு போனீர்கள் எனில், ரசிகர்களின் கூட்டத்தில் கொரோனா எளிதில் பரவ வாய்ப்புள்ளது. அப்படி இருக்கையில் ரசிகர்களின் மீது அக்கறை இல்லாமல் வசூலை மட்டுமே விஜய் நோக்கமாக கொண்டுள்ளார்," என்றும் சிலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

அதேசமயம் அவருக்கு ஆதரவாகவும் கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன. அதாவது, தியேட்டர்கள் பெரும்பாலும் நஷ்டத்தில் இயங்கி வரும் சூழலில், பலரும் ஓடிடியில் படத்தை வெயிட்ட போதிலும், தன் படம் தியேட்டரில் தான் வெளியாகும் என அவர்களுக்கு நம்பிக்கை அளித்தவர் விஜய். இது அவருடைய படத்திற்கான சந்திப்பு மட்டுமல்ல, ஓட்டுமொத்த தியேட்டர் உரிமையாளர்களின் கோரிக்கையாகவும், ஒட்டுமொத்த தமிழ் சினிமாவின் குரலாகத்தான் பார்க்க வேண்டும். தமிழ் சினிமாவை காப்பாற்ற அவர் எடுத்த முயற்சி இது என்பது மாதிரியான கருத்துக்களும் பதிவிடப்பட்டு வருகின்றன. இதனால் டுவிட்டரில் விஜய் - முதல்வர் சந்திப்பை வைத்து ஆதரவாக #SaviourOfKollywoodVIJAY என்ற ஹேஷ்டாக்கும், எதிராக #எடப்பாடிகாலில்விழுந்தவிஜய் என்ற ஹேஷ்டாக்கும் டிரெண்ட் ஆனது.

Advertisement
வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram - Tiruchirappalli,இந்தியா
29-டிச-202008:23:19 IST Report Abuse
Ram பணத்திற்க்காக விஜயும் தேர்தலில் விஜயின் சப்போர்ட் குறலுக்காக ஆதிமுகவும் இணையலாம். மக்கள் உண்மையையை புரிந்துகொள்ள வேண்டும்.
Rate this:
Cancel
arul -  ( Posted via: Dinamalar Android App )
29-டிச-202006:25:11 IST Report Abuse
arul கொரானா என்னடா கொரானா கொரானா.பணம்தாணாடா நிரந்தரம்.by vijai
Rate this:
Cancel
S.N - chennai,யூ.எஸ்.ஏ
29-டிச-202004:24:30 IST Report Abuse
S.N நடிகரோ, நடிகையோ தன் ரசிகர்கள் மேல் அக்கறையிருந்தால் , இன்னும் சில காலம் கொரோனாவால் தன் ரசிகனின் குடும்பம் அவதிப்படாமல் இருக்க தான் நடித்த சினிமாவை பார்க்க தியேட்டருக்கு வந்து பார்க்க வேண்டாம் என்று அறிவுரை தருவர்.
Rate this:
LAX - Trichy,இந்தியா
30-டிச-202012:02:33 IST Report Abuse
LAXCORRECT.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X