சேலம் : கொரோனா காலத்தில் ஓடாத வாகனங்களுக்கு சாலை வரியை ரத்து செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளன மாநில தலைவர் முருகன் வெங்கடாஜலம் தமிழக முதல்வர் போக்குவரத்துத்துறை அமைச்சர் உயரதிகாரிகளுக்கு அனுப்பிய மனு:
ஊரடங்கு தளர்வால் தற்போது வாகனங்கள் இயங்கத்தொடங்கி உள்ளன. ஆனால் சரக்கு வாகனங்கள் அனைத்துக்கும் முழுமையாக 'லோடு' கிடைப்பதில்லை. கொரோனாவுக்கு முன் ஒரு லாரி மாதத்தில் குறைந்தது 10 லோடுகள் வீதம் ஏற்றின. தற்போது ஐந்து 'லோடு' கிடைப்பதே சிரமமாக உள்ளது. மணல் லாரிகளுக்கு இரு மாதத்துக்கு ஒருமுறை தான் 'லோடு' கிடைக்கிறது. ஆட்டோ, கால் டாக்சி, மினி ஆட்டோ, சுற்றுலா வாகனங்கள் முடங்கியுள்ளன. குறைந்த அளவில் கிடைக்கும் வருவாய் வாகன பராமரிப்புக்கே போதுமானதாக உள்ளது.
நிதி நிறுவனங்கள் கொரோனா காலத்துக்கும் சேர்த்து கடன் தொகையை செலுத்த உரிமையாளர்கள் டிரைவர்களை மிரட்டி வசூலிப்பது வாகனங்களை பறிமுதல் செய்வது தொடர்கிறது. வருவாய் சரிவால் சாலை வரி ஆவணங்களை புதுப்பிக்க முடியாமல் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றனர்.இந்நிலையில் அரசும் தன் பங்குக்கு சாலை வரி ஆவணங்கள் புதுப்பிக்காமல் இருப்பதற்கு அபராதம் விதிப்பதால் வாகன உரிமையாளர்கள் டிரைவர்கள் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதனால் ஊரடங்கு அமலில் இருந்த ஏப்ரல் தொடங்கி செப். வரையான காலத்துக்கு சாலை வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். குறைந்த அளவில் இயங்கும் வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை உடனே ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE