பெண்களின் திருமண வாழ்க்கை மூன்றாம் நபர் தலையீடு கூடாது

Added : டிச 28, 2020
Share
Advertisement
அலகாபாத் : உத்தர பிரதேசத்தில், முஸ்லிம் இளைஞருடன், ஹிந்து பெண் சேர்ந்து வாழ அனுமதி அளித்த உயர் நீதிமன்றம், 'பெண்களின் திருமண வாழ்க்கையில், மூன்றாம் நபர் தலையிடக்கூடாது' என, உத்தரவிட்டுள்ளது.உத்தர பிரதேச மாநிலத்தில், 'லவ் ஜிகாத்' எனப்படும் கட்டாய மதமாற்ற தடை சட்டம் அமலானதை தொடர்ந்து, ஹிந்து பெண்களை திருமணம் செய்து, கட்டாய மத மாற்றம் செய்ய முயன்ற, 35 இளைஞர்கள் கைதாகி

அலகாபாத் : உத்தர பிரதேசத்தில், முஸ்லிம் இளைஞருடன், ஹிந்து பெண் சேர்ந்து வாழ அனுமதி அளித்த உயர் நீதிமன்றம், 'பெண்களின் திருமண வாழ்க்கையில், மூன்றாம் நபர் தலையிடக்கூடாது' என, உத்தரவிட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில், 'லவ் ஜிகாத்' எனப்படும் கட்டாய மதமாற்ற தடை சட்டம் அமலானதை தொடர்ந்து, ஹிந்து பெண்களை திருமணம் செய்து, கட்டாய மத மாற்றம் செய்ய முயன்ற, 35 இளைஞர்கள் கைதாகி உள்ளனர்.இதன்படி கைதான முஸ்லிம் இளைஞர் ஒருவர், தன் மனைவியை கண்டுபிடித்து தரக்கோரி, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில், ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். விசாரணையில், நேரில் ஆஜரான இளம்பெண், தனக்கு, 18 வயது நிறைவடைந்துள்ளது என்பதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்ததுடன், கணவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாக கூறினார்.
இதையடுத்து, அந்த இளைஞர் மீதான வழக்கை ரத்து செய்த, நீதிபதிகள் பங்கஜ் நக்வி மற்றும் விவேக் அகர்வால் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:திருமண வயதை எட்டிய பெண்ணின் வாழ்வு குறித்து தீர்மானிக்க, மூன்றாம் நபர்களுக்கு உரிமை இல்லை. சொந்த விருப்பத்தின்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்ள, அவர்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது. இளம்பெண், தன் கணவருடன் வாழ விரும்புவதால், அதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
இவ்வாறு, அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X